ஜனவரி 18 உறுதி: அறிமுகமாகும் ஹானர் வி40., என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா?

|

ஹானர் வி40 5 ஜி ஸ்மார்ட்போன் ஜனவரி 18 ஆம் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. வெளியான டீசரின் மூலம் இதன் வடிவமைப்பு வெளியாகியுள்ளது.

ஹானர் வி40 ஸ்மார்ட்போன்

ஹானர் வி40 ஸ்மார்ட்போன்

ஹானர் வி40 ஸ்மார்ட்போன் குறித்து முன்னதாகவே பல தகவல்கள் கசிந்தன. இதன் அதிகாரப்பூர்வ டீசர் மூலம் இதன் டிஸ்ப்ளேவின் இடது பக்கத்தில் இரட்டை பஞ்ச் ஹோல் முன்புற கேமரா கொண்டிருக்கிறது. மேலும் ஸ்மார்ட்போனின் கீழே சிம்கார்ட் ஸ்லாட்கள் உள்ளன.

ஹானர் வி40 5ஜி ஸ்மார்ட்போன்

ஹானர் வி40 5ஜி ஸ்மார்ட்போன்

ஹானர் வி40 5ஜியில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் 6.72 இன்ச் எல்இடி டிஸ்ப்ளேவும், 236 x 2676 பிக்சல் முழு எச்டி ப்ளஸ் தெளிவுத்திறனையும் கொண்டுள்ளது. மேலும் இதில் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதமும், 300 ஹெர்ட்ஸ் டச் திறனையும் கொண்டுள்ளது.

8 ஜிபி ரேம் என ஒரே வேரியண்ட்

8 ஜிபி ரேம் என ஒரே வேரியண்ட்

ஹானர் வி40 ஸ்மார்ட்போனில் மீடியா டெக் பரிமாணம் 1000 ப்ளஸ் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த சாதனம் 8 ஜிபி ரேம் என்ற ஒற்றை வேரியண்டிலும் 128 ஜிபி, 256 ஜிபி என்ற இரண்டு சேமிப்பு வசதிகளிலும் கிடைக்கிறது. இது ஆண்ட்ராய்டு 10 ஆதரவு மூலம் இயக்கப்படுகிறது.

4000 எம்ஏஎச் பேட்டரி

4000 எம்ஏஎச் பேட்டரி

ஹானர் வி40 5ஜி ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி, 66 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவு, 45 வாட்ஸ் ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் இருக்கிறது. இதில் 64 எம்பி முதன்மை கேமரா, 8 எம்பி இரண்டாம் நிலை கேமரா, இரட்டை 2 எம்பி கேமராக்கள் உள்ளன.

32 எம்பி செல்பி கேமரா

32 எம்பி செல்பி கேமரா

முன்புறத்தில் 32 எம்பி செல்பி கேமரா வடிவமைப்பு உள்ளது. ஹானர் நிறுவனம் வி40 ஸ்மார்ட்போனுடன், மடிக்கணினிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள், டிவிக்கள் உள்ளிட்டவைகள் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Honor V40 Launch Confirmed For January 18

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X