இன்-டிஸ்பிளே செல்பி கேமரா வசதியுடன் மிரட்டலான ஹானர் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
இந்த ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது, பின்பு ஹானர் வி20 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.30,428-ஆக உள்ளது.
ஹானர் நிறுவனம் தற்சமயம் மிரட்டலான ஹானர் வி20 என்ற ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் 48எம்பி பிரைமரி கேமரா, இன்-டிஸ்பிளே செல்பீ கேமரா, 3டி ஜெஸ்ட்யூர் உள்ளிட்ட
பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

குறிப்பாக வுழுகு 3டி இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது, இது கேம்களை 3டி ஜெஸ்ட்யூர் மூலம் விளையாட முடியும். மேலும் இந்த சாதனத்தில் வழங்கப்பட்டுள்ள லின்க் டர்போ தொழில்நுட்பம் பயனரின் நெட்வொர்க் மாடல்களை புரிந்து கொண்டு வைபை மற்றும் 4ஜி நெட்வொர்க்களிடையே தேர்வு செய்து கொள்ளும்.
பின்பு கைரேகை சென்சார், செயற்கை நுண்ணறிவு சார்ந்த பல்வேறு அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்தின் இந்திய விலை மதிப்பு மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்களைப்
பார்ப்போம்.

டிஸ்பிளே:
ஹானர் வி20 ஸ்மார்ட்போன் மாடல் 6.4-இன்ச் எப்எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080x2310 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது.

சிப்செட்:
இக்கருவி ஆக்டோ-கோர் ஹூவாய் கிரின் 980 சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

கேமரா:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, AIS மற்றும் TOF 3D இரண்டாவது பிரைமரி கேமரா வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 25எம்பி செல்பி கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

சேமிப்பு:
ஹானர் வி20 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியுடன் வெளிவந்துள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி:
இந்த ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது, பின்பு ஹானர் வி20 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.30,428-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications