இந்தியாவில் களமிறங்கும் அசத்தலான ஹானர் வி10.!
ஹானர் வி10 ஸ்மார்ட்போன் மாடலை வரும் ஜனவரி 8-ம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது ஹவாய் நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும்.
ஹவாய் நிறுவனம் கடந்த வாரம் ஹானர் 7எக்ஸ் மற்றும் ஹானர் வி10 ஸ்மார்ட்போன் மாடலை லண்டனில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்வில் அறிமுகப்படுத்தியது, இந்த ஸ்மார்ட்போன்கள் பொறுத்தவரை பல்வேறு சிறப்பம்சங்களளை கொண்டுள்ளது.
ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை 12,999-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு ஹவாய் நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஹானர் வி10 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த தேதியை அறிவித்துள்ளது ஹவாய் நிறுவனம்.

2018 ஜனவரி 8;
ஹானர் வி10 ஸ்மார்ட்போன் மாடலை வரும் ஜனவரி 8-ம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது ஹவாய் நிறுவனம். மேலும் இந்த
ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹானர் வி10 :
ஹானர் வி10 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.99-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஆண்ட்ராய்டு ஓரியோ:
ஹானர் வி10 ஸ்மார்ட்போனில் கிரின் 970 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஹானர் வி10 ஸ்மார்ட்போன்.

6ஜிபி ரேம்:
இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64/128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

20எம்பி டூயல் ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 20எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3750எம்ஏஎச்:
ஹானர் வி10 ஸ்மார்ட்போனில் 3750எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.29.000-வரை இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.


Click it and Unblock the Notifications