மலிவான மாறுபாடாக களமிறங்கும் ஹானர் வி10 (அம்சங்கள், விலை, வெளியீடு).!

|

வருகிற நவம்பர் 28-ஆம் தேதி சீனாவில் ஒரு பெரிய வெளியீட்டு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஹூவாய் நிறுவனம் செய்த வண்ணம் உள்ளது. இந்நிகழ்வில் அதன் ஹானர் வி10 ஸ்மார்ட்போன் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

மலிவான மாறுபாடாக களமிறங்கும் ஹானர் வி10 (அம்சங்கள், விலை, வெளியீடு).!

இதுவரை வெளியான ஹானர் வி10 ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் மற்றும் வதந்திகள் ஒருபக்கமிருக்க தற்போது, சமூக ஊடக வலைத்தளமான விபோவில் கூறப்படும் வி10 சாதனத்தின் முதல் அதிகாரப்பூர்வமான புகைப்படம் தோன்றியது போல் தெரிகிறது.

18: 9 விகிதத்திலான டிஸ்பிளே

18: 9 விகிதத்திலான டிஸ்பிளே

இந்த சாதனம் டிஇஎன்ஏஏ-வில் காணப்பட்டதை போலவே, இயக்கருவி 18: 9 விகிதத்திலான டிஸ்பிளே அளவை காட்சிப்படுத்துகிறது மற்றும் சான்றிதழ் தளத்தில் கவனிக்கப்பட்டதைப் போலவே வளைந்த முனைகளுடன், முன்னணி கேமராக்களுடன் காணப்படுகிறது.

பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர்

பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர்

இந்த லீக்ஸ் புகைப்படமானது, 'ஒரு உன்னதமான பெஸல்லெஸ் வடிவமைப்புடன் கூடிய ஒரு முழு திரை டிஸ்பிளேவை காண்பிக்கிறது எண்பத்தில் சந்தேகமில்லை. ஆக, இந்த சாதனத்தின் பின்புறத்திற்கு அதன் கைரேகை ஸ்கேனர் தள்ளப்பட வேண்டும் என்று பொருள்.

16எம்பி மற்றும் 20 எம்பி சென்சார்கள்

16எம்பி மற்றும் 20 எம்பி சென்சார்கள்

கேமராத்துறையை பொறுத்தமட்டில், இக்கருவியின் இரட்டை கேமரா அமைப்பானது ஒரு 16எம்பி மற்றும் 20 எம்பி சென்சார்கள் கொண்டுவரலாமென முந்தைய அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. செல்பீக்கள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக முன்பக்கம் எதிர்கொள்ளும் ஒரு 13 எம்பி சென்சார் இடம்பெறலாம்.

64 ஜிபி அல்லது 128 ஜிபி

64 ஜிபி அல்லது 128 ஜிபி

ஜிஎஸ்எம்ஏறேனா வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, இந்த ஸ்மார்ட்போன் ஆனது கிரின் 970 சிப்செட் உடனான ஒரு 6 ஜிபி ரேம் இணைந்து இயக்கப்படுகிறது.மேலும் இக்கருவி 64 ஜிபி அல்லது 128 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு மாதிரிகளில் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 8.0  ஓரியோ

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ

ஹானர் வி10 ஆனது ஹூவாய் மேட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனை விட மலிவானதொரு மாறுபாடாக இருக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நிறுவனத்தின் இஎம்யூஐ (EMUI) கொண்டு வரும் என்று அறிவிக்கப்பட்டுவிட்டதால் இக்கருவி ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ கொண்டு வருமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது

விலைப்புள்ளி

விலைப்புள்ளி

இல்லை நிர்ணயத்தை பொறுத்தமட்டில், ஹானர் வி10 ஆனது சுமார் ரூ.30,000/- என்ற விலைப்புள்ளியை எட்டலாம். இது சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட்போனிற்கு சிறந்த போட்டியாளராக இருக்க வேண்டும். இது தவிர சமீபத்தில் வெளியான லீக்ஸ் தகவலின் கீழ், ஹூவாய் நோவா 3 ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் சில பிரதான அம்சங்கள் மீதான தெளிவை நம்மால் பெறமுடிகிறது.

ஹோம் பொத்தானே கைரேகை சென்சார்

ஹோம் பொத்தானே கைரேகை சென்சார்

வெளியான புகைப்படத்தில் ஸ்மார்ட்போனின் பெஸல்லெஸ் டிஸ்பிளே வடிவமைப்பு மற்றும் உயரமான காட்சி ஆகியவற்றை காண முடிகிறது. இதன் அர்த்தம் இந்த ஸ்மார்ட்போன் 18: 9 என்கிற விகிதத்திலான டிஸ்பிளே அளவை கொண்டிருக்கும். கருவியின் முன்னணி பேனலில் முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமரா, இயர்பீஸ் மற்றும் ஒரு எல்இடி ப்ளாஷ் ஆகியவைகளை தெளிவாக காண முடிகிறது. பின்புறம் ஏற்றப்பட்ட கைரேகை சென்சார் ஏதுமில்லை என்பதால் அதன் ஹோம் பொத்தானே ​​ஒரு கைரேகை சென்சார் செயல்பட முடியும்.

இரட்டை கேமரா அமைப்பு

இரட்டை கேமரா அமைப்பு

பின்புறத்தை பொறுத்தமட்டில், எல்இடி ப்ளாஷ் கொண்ட ஒரு இரட்டை கேமரா அமைப்பு காணப்படுகிறது. உடன் ஆன்டெனா பட்டைகள் மேல் மற்றும் கீழ் பலகத்தில் இயங்குகிறது. மேலும் ஒரு ஐஆர் பிளாஸ்டர் மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாக் அளவிலான மைக்ரோஃபோனையும் கொண்டுள்ளது.

5.60 அங்குல முழு எச்டி ப்ளஸ் டிஸ்பிளே

5.60 அங்குல முழு எச்டி ப்ளஸ் டிஸ்பிளே

அதே சமயம் ஒரு யூஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் ஒரு ஸ்பீக்கர் கிரில் ஆகியவைகளையும் உள்ளது. புகைப்படத்தில் முன் மற்றும் பின்புறத்தில் வளைவான விளிம்புகளையும் கவனிக்கலாம். முந்தைய லீக்ஸ் தகவலின்கீழ், சில முக்கிய குறிப்பீடுகளை மறுபரிசீலனை செய்யும் வகையில் ஹூவாய் நோவா 3 ஆனது ஒரு 5.60 அங்குல முழு எச்டி ப்ளஸ் டிஸ்பிளே (2160 x 1080 பிக்சல்கள் தீர்மானம்; 18: 9 விகிதம்) கொண்டிருக்கலாம். மேலும் இது புதிய கிரின் 670 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும்.

மொத்தம் நான்கு கேமராகள்

மொத்தம் நான்கு கேமராகள்

பின்புறம் ஏற்றப்பட்ட கைரேகை சென்சாரை கொண்டிருக்கலாம். 32 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்ட 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ரேம் கொண்ட 3 ஜிபி என இரண்டு சேமிப்பு மாதிரிகளில் வெளிவரலாம். நோவா 2 மற்றும் நோவா 2ஐ போன்றே இக்கருவியும் மொத்தம் நான்கு கேமராக்களை கொண்டுவரலாம் என கூறப்படுகிறது.

3340எம்ஏஎச் பேட்டரி

3340எம்ஏஎச் பேட்டரி

அதாவது பின்புறத்தில் ஒரு 16 மெகாபிக்சல் மற்றும் 20 மெகாபிக்சல் என்ற இரட்டை கேமரா அமைப்பு மற்றும் முன்பக்கம் 20 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் என்ற இரட்டை கேமரா அமைப்பு விளையாடலாம். மேலும் இந்த பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனான 3340எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படலாம். இது அண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட இஎம்யூஐ கொண்டு இயங்கலாம்.

Best Mobiles in India

English summary
Honor V10 leaks ahead of its launch as first photo is spotted online. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X