நோக்கியாவிற்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹானர் வி10.!

By Prakash
|

ஹவாய் நிறுவனம் பொறுத்தவரை லண்டன், யு.கே.யில் நடத்தப்பட்ட உலகளாவிய வெளியீட்டு நிகழ்வில் ஹானர் வி10 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும், சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்மார்ட்போன் பொறுத்தவரை நோக்கியா 8 ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக வெளிவந்துள்ளது, அதன்பின்பு ஹானர் வி10 சாதனம் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது, மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஹானர் வி10 :

ஹானர் வி10 :

ஹானர் வி10 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.99-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஹானர் வி10 ஸ்மார்ட்போனில் கிரின் 970 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஹானர் வி10 ஸ்மார்ட்போன்.

20எம்பி டூயல் ரியர் கேமரா:

20எம்பி டூயல் ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 20எம்பி + 16எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 13மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

டூயல்-சிம், வைபை 802.11, ப்ளூடூத் வி4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

 3750எம்ஏஎச்:

3750எம்ஏஎச்:

ஹானர் வி10 ஸ்மார்ட்போனில் 3750எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இணையம் போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

விலை:

விலை:

ஹானர் வி10 ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி முறையே ரூ.38,000-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்தியா ட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் ஜனவரி 8 முதல் விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Honor V10 globally launched Price features and specifications ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X