பர்ஸ் வடிவில் அசுர போன்.. OLED டிஸ்பிளே.. 16GB ரேம்.. 50MP கேமரா.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த போல்டபிள் மாடல்களையும் தூக்கிசாப்பிடும் விதமாகவும் பெண்களை எளிதில் கவரும் பர்ஸ் டிசைனிலும் 16ஜிபி ரேம், ஓஎல்இடி டிஸ்பிளே, 35W ஃபாஸ்ட் சார்ஜிங், 4500mAh பேட்டரி, 50எம்பி கேமரா போன்ற அம்சங்களுடன் ஹானர் வி பர்ஸ் (HONOR V Purse) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இப்போதைக்கு சாம்சங் மற்றும் மோட்டோரோலா நிறுவனங்களே போல்டபிள் போன்களில் முன்னணியில் இருக்கின்றன. இவற்றின் விற்பனை மட்டுமே அதிகளவில் நடக்கின்றன. அதைத்தொடர்ந்து, ஒன்பிளஸ், விவோ, ஓப்போ போன்ற நிறுவனங்கள் அடுத்தடுத்து போல்டபிள் (Foldable) மற்றும் பிளிப் (Flip) போன் தயாரிப்பில் மும்முரம் காட்டி வருகின்றன.

இதனால் அவற்றின் டிசைன்கள் இதுவரையில் பார்த்திராத வகையில் இருக்கின்றன. இந்த வரிசையில் கடைசியில் சேர்ந்த ஹானர் (HONOR) நிறுவனம், பர்ஸ் வடிவில் போல்டபிள் போனை அறிமுகம் செய்து, ஒட்டுமொத்த கவனத்தையும் பெற்றுவிட்டது. இந்த ஹானர் வி பர்ஸ் மாடலின் முழு அம்சங்கள், விலை மற்றும் விற்பனை விவரங்கள் பின்வருமாறு.
ஹானர் வி பர்ஸ் அம்சங்கள் (HONOR V Purse Specifications): இந்த ஹானர் போன் 6.45 இன்ச் (2348 × 1088 பிக்சல்கள்) ஓஎஸ்இடி (OLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. அதுவே அன்போல்ட் (Unfold) செய்தால் 7.71 இன்ச் (2348 × 2016 பிக்சல்கள்) டிஸ்பிளேவை பயன்படுத்த முடியும்.
இந்த டிஸ்பிளேவில் 1.07 பில்லியன் கலர் சப்போர்ட், டிசிஐ - பி3 (DCI-P3) வைடு கலர் காமட் (Wide Color Gamut), 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2160 PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது. கிட்டத்தட்ட ஒரு அனைத்து பிரீமியம் டிஸ்பிளே அம்சங்களையும் கொண்டிருக்கிறது.
இந்த போல்டபிள் பர்ஸ் மாடலில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 778ஜி 6என்எம் (Octa Core Snapdragon 778G 6nm) சிப்செட் வருகிறது. அதோடு அட்ரினோ 642எல் ஜிபியு (Adreno 642L GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்கள் வருகின்றன.
அதோடு 256 ஜிபி என்எம் கார்டு (NM Card) சப்போர்ட் வருகிறது. மேஜிக்ஓஎஸ் 7.2 (MagicOS 7.2) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் டூயல் ரியர் கேமரா செட்டப் வருகிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் கொண்டிருக்கிறது. 8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஹானர் பர்ஸில் 35W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4500mAh பேட்டரி வருகிறது. இதற்கு டைப் - சி சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மற்றும் டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers) வருகிறது.
இந்த மாடலின் கனெக்டிவிட்டி அம்சங்களை பார்க்கையில், 5ஜி என்எஸ்ஏ (5G NSA), டூயல் 4சி வோஎல்இடி (Dual 4G VoLTE), வை-பை 6 (Wi-Fi 6), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜிபிஎஸ் (GPS), என்எப்சி (NFC) போன்றவை கொடுக்கப்பட்டு உள்ளன.
இந்த ஹானர் வி பர்ஸ் மாடலானது, கேமெலியா கோல்டு (Camellia Gold), கிளாசியர் ப்ளூ (Glacier Blue), எலிகன்ட் பிளாக் (Elegant Black) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இதன் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 69,755 ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.75,343 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஹானர் பர்ஸ் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு, விற்பனைக்கு வந்துள்ளது. அடுத்த சில மாதங்களில் இந்தியா உள்பட மற்ற நாடுகளில் வெளியாக வாய்ப்புள்ளது. ஏற்கனவே, ஹானர் நிறுவனம் பல ஆண்டுகளுக்கு பின்பு ஹானர் 90 மாடலுடன், இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








