மிரண்டு போன மொபைல் மார்க்கெட்.. 6000mAh லாம் இனி சும்மா.. 8000mAh பேட்டரி உடன் புதிய Honor போன்!
6000mAh பேட்டரிக்கே 'கன்வின்ஸ்' ஆகும் கஸ்டமர்கள் இருக்கிறார்கள் என்பதை நன்றாக புரிந்துகொண்ட ஸ்மார்ட்போன் நிறுவனங்கள், 6000+ mAh பேட்டரி மற்றும் 7000+ mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்களை அதிக அளவில் அறிமுகம் செய்ய தொடங்கி உள்ளன; திட்டமிட்டு உள்ளன.
உதாரணத்திற்கு வருகிற ஏப்ரல் 11 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஐக்யூ இஸட்10 ஸ்மார்ட்போன் ஆனது 7300mAh பேட்டரி கொண்ட செக்மென்ட்டின் (அதாவது குறிப்பிட்ட விலைப்பிரிவில் இவ்வளவு பெரிய பேட்டரி உடன் அறிமுகமாகும்) முதல் ஸ்மார்ட்போனாகும்.

இதுவே (7300mAh பேட்டரி) ஸ்மார்ட்போன் சந்தையில் சலசலப்பை கிளப்பி உள்ள நிலையில் ஹானர் நிறுவனம் இதைவிட பெரிய சலசலப்பை கிளப்பி உள்ளது. இந்நிறுவனம் "இதுவரை இல்லாத அளவிலான" மிகப்பெரிய பேட்டரியை கொண்ட ஸ்மார்ட்போனுடன் புதிய முத்திரை ஒன்றை பதிக்கதிட்டமிட்டுள்ளது
இந்நிறுவனம், புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஒன்றில் நீண்ட பேட்டரி லைஃப்பை வழங்கும் ஒரு பெரிய பேட்டரியை பேக் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 8,000mAh பேட்டரி உடன் வரலாம் என்று கூறப்படுகிறது
மேலும் இந்த ஸ்மார்ட்போன் மிகவும் சத்தமாக ஒலி எழுப்பும் ஸ்பீக்கர்களை கொண்டிருக்கும் என்றும், இந்த போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் சீரிஸ் சிப்செட் மூலம் இயக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பிட்ட சிப்செட்டை பேக் செய்யும் பட்சத்தில், இது சீனாவில் மட்டுமன்றி உலகளாவிய வெளியீட்டை காணும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
பெரிய பேட்டரிகளை விரைவாகவும் திறமையாகவும் சார்ஜ் செய்வது எப்போதுமே ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது. இருப்பினும் ஹானர் நிறுவனத்தின் இந்த 8000mAh பேட்டரி ஆனது 80W சார்ஜிங்கை தான் ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹானர் நிறுவனத்தை போலவே ரியல்மி நிறுவனமும் பெரிய 8,000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனில் வேலை செய்வது போல் தெரிகிறது. இதுவும் 80W சார்ஜிங்கை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் மாடல் பெயர் குறித்த விவரங்கள் இல்லை.
ஆனால் 7300mAh பேட்டரி உடன் வரும் ஐக்யூ இஸட்10 ஸ்மார்ட்போன் அப்படி இல்லை. அதிகாரப்பூர் டீஸர்களின் வழியாக, இந்த ஸ்மார்ட்போனில் 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் ஒரு பெரிய 7,300mAh பேட்டரி பேக் இருப்பது உறுதி செய்யப்பட்டது. கூடவே ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 7s Gen 3 SoC) உடன் வரும் என்பது உறுதிசெய்யபட்டுள்ளது.
எல்லாவற்றை விட முக்கியமாக ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.22,000 க்கும் குறைவான விலைக்கு அறிமுகம் ஆகும் என்கிற தகவலும் கிடைத்துள்ளது. ஆக ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.21,999 க்கு அறிமுகமாக வாய்ப்புள்ளது. இது ஸ்டெல்லர் பிளாக் மற்றும் கிளேசியர் சில்வர் என இரண்டு கலர் ஆப்ஷன்களில் அறிமுகப்படுத்தப்படுவம்து உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் 11 ஆம் தேதியன்று ஐக்யூ இஸட்10 5ஜி உடன் சேர்ந்து ஐக்யூ இஸட்10எக்ஸ் ஸ்மார்ட்போனும் அறிமுகமாகும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே இஸட்10 சீரீஸில் ஐக்யூ இஸட்10 டர்போ (iQOO Z10 Turbo) அல்லது ஐக்யூ இஸட்10 டர்போ ப்ரோ (iQOO Z10 Turbo Pro) ஆகிய மாடல்களும் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்யூ இஸட்10 டர்போ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 1.5K ரெசல்யூஷன் உடனான 6.78-இன்ச் பிளாட் OLED LTPS டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 8400 சிப்செட்
- 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமராவுடன் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- முன்னரே குறிப்பிட்டபடி 7000mAh பேட்டரி
- 90W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- ஷார்ட்-ஃபோகஸ் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- விலை ரூ.40,000 க்குள் (ரூ.39,990) இருக்கலாம்.
ஐக்யூ இஸட்10 டர்போ ப்ரோவில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- LTPS பேக்லைட்டிங் உடன் கூடிய 6.78-இன்ச் 1.5கே டிஸ்பிளே
- பிளாஸ்டிக் மிட்-ஃபிரேம் டிசைன்
- குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8எஸ் எலைட் சிப்செட்
- அட்ரினோ 825 ஜிபியு
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்
- 12ஜிபி ரேம்
- 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு உடனான 7000mAh பேட்டரி
- ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- விலை ரூ.45,000 க்குள் (ரூ.44,990) இருக்கலாம்.


Click it and Unblock the Notifications