சீனாக்காரன் மூளையே தனி.. அங்கும் இங்கும் நகரும் 200MP கிம்பல் கேமரா.. Honor Robot Phone விற்பனைக்கு ரெடி!
சீன எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஆன ஹானர், சொன்னபடியே எம்டபுள்யூசி 2026 நிகழ்வின் போது அதன் ஹானர் ரோபோட் போனை (Honor Robot Phone ) காட்சிப்படுத்தியது. இதன் மூலம் ஹானர் நிறுவனமானது சாம்சங் மற்றும் ஆப்பிள் போன்ற அதன் பெரிய போட்டியாளர்களிடமிருந்து தன்னை தனித்து நிறுத்தியும் கொண்டுள்ளது.
2020 ஆம் ஆண்டில் ஹவாய் நிறுவனத்திலிருந்து பிரிந்த இந்த நிறுவனம், கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) பார்சிலோனாவில் நடந்த மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2026 நிகழ்வின் ஒரு பகுதியாக அதன் லேட்டஸ்ட் போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆன ஹானர் மேஜிக் வி6 மாடலை அறிமுகப்படுத்தியது. அதோடு ஹானர் ரோபோட் போனும் காட்சிப்படுத்தப்பட்டது.

நினைவூட்டும் வண்ணம் ஹானர் நிறுவனம் முதன்முதலில் கடந்த 2025 அக்டோபரில் தான் அதன் ரோபோ போனை டீஸ் செய்தது. இந்த ஸ்மார்ட்போனின் பாடியில் இருந்து வெளியேறும் ஒரு ரோபோ கையில் ஒரு கேமராவும் உள்ளது. இது சீன ட்ரோன் தயாரிப்பாளர் ஆன டிஜேஐ (DJI) நிறுவனத்திடம் ஒஸ்மோ (Osmo) ப்ராடெக்ட் சீரீஸில் இருந்து ஈர்க்கப்பட்டது போல் தெரிகிறது.
ஒரு சிறிய மோட்டாரால் இயக்கப்படும் இந்த கேமரா - கிம்பல் ஸ்டெபிலைசேஷன் (gimbal stabilization) உடனான 200எம்பி கேமராவாகும். இது ஒரு பொருள் அல்லது நபரை லாக் செய்து, அது நகரும்போது அதை சரியாக கண்காணிக்கும் திறனை கொண்டுள்ளது. மேலும் இதன் வழியாக ஒரு பயனர் ஹானரின் ஏஐ அசிஸ்டென்ட்டிடம் பேசலாம், பின்னர் இந்த ஸ்மார்ட்போனின் "கேமரா" ஆனது தலையசைப்பதன் மூலம் ஆம் அல்லது இல்லை என்கிற பதிலையும் கொடுக்கும்.
2026 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் வணிக ரீதியாகக் கிடைக்க செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக ஹானர் தெரிவித்துள்ளது. ஒரே மாதிரியான தோற்றமுடைய ஸ்மார்ட்போன்களின் கடலில் தனித்து நிற்கும்படியாக உருவிக்கப்பட்டுள்ள ஹானர் ரோபோட் போன் ஆனது - வேலைக்கு ஆகுமா? வியாபாரம் ஆகுமா என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஹானர் ரோபோட் போன் விலை - மிகவும் உயர்ந்ததாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இடத்தில் இன்னொரு விஷயமும் குறிப்பிடத்தக்கது. ஹானர் நிறுவனமானது சந்தையின் உயர்நிலை பகுதியில், குறிப்பாக ஐரோப்பா போன்ற வெளிநாட்டு சந்தைகளில், சாம்சங் மற்றும் ஆப்பிள் போன்றவற்றுக்கு சவால் விட விரும்பும் அளவிற்கு அதன் முன்னேற்றத்தை தொடர்கிறது.
கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச் படி, சீனாவில், 13% க்கும் அதிகமான சந்தை பங்கைக் கொண்ட ஆறாவது பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனமாக ஹானர் நிறுவனம் இந்த ஆண்டை முடித்தது. ஆனால் இது வெளிநாடுகளில் மிக சிறிய பங்கையே கொண்டுள்ளது, அங்கு இது ஒரு பிராண்ட் இருப்பை மட்டுமே நிறுவ முயற்சிக்கிறது. ஓம்டியா ஆராய்ச்சியின் படி, 2025 ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் அதன் சந்தைப் பங்கு 3% ஆக இருந்தது.
ஹானர் மேஜிக் வி6 போல்டபிள் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: சாம்சங் அதன் கேலக்ஸி இஸட் ஃபோல்டு சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் போல்டபிள் ஸ்மார்ட்போன் பிரிவில் ஆதிக்கம் செலுத்தும் வேளையில், ஹானர் நிறுவனம் அதன் போல்டபிள் வி சீரீஸ் ஸ்மார்ட்போன்களுடன் - அந்த பிரீமியம் பிரிவில் நுழைகிறது
ஹானர் மேஜிக் வி6 ஸ்மார்ட்போனில் மிக மெல்லிய பேட்டரிகள் உள்ளன.எனவே இது மூடப்படும் போது வெறுமனே 8.75 மிமீ தடிமனை மட்டுமே கொண்டிருக்கும. இது முன்னதாக வெளியான மாடலுடன் (8.8 மிமீ முதல் 9 மிமீ) ஒப்பிடும் போது சற்றே ஸ்லிம் ஆன டிசைன் ஆகும். இது ஐபோன் 17 ப்ரோ மேக்ஸின் அதே அளவு என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது
ஹானர் மேஜிக் வி6 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 மொபைல் பிளாட்ஃபார்முடன் வருகிறது. ஹானர் மேஜிக் வி6 போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆனது 2026 மார்ச் மாதத்தில் சீனாவில் விற்பனைக்கு வரும் என்றும், அதைத் தொடர்ந்து இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் சர்வதேச சந்தைகளில் விற்பனைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் விலை நிர்ணயம் இன்னும் வெளியிடப்படவில்லை.


Click it and Unblock the Notifications