Home
Mobile

HONOR ரோபோட் போன் அறிமுகம்.. 7060எம்ஏஎச் பேட்டரி.. 200எம்பி கேமரா.. ஒஎல்இடி டிஸ்பிளே.. என்ன விலை?

ஹானர் நிறுவனம் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஹானர் ரோபோட் போனை (HONOR Robot Phone) சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும். இப்போது இந்த புதிய ஹானர் போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஹானர் ரோபோட் போன் அம்சங்கள் (HONOR Robot Phone Specifications): 6.31-இன்ச் 1.5கே LTPO ஒஎல்இடி டிஸ்பிளே உடன் வெளியாகி உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 6800 நிட்ஸ் பிரைட்னஸ், 1216 x 2640 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

HONOR ரோபோட் போன் அறிமுகம்.. 7060எம்ஏஎச் பேட்டரி.. என்ன விலை?

அதேபோல் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம்(Octa Core Snapdragon 8 Elite Gen 5 3nm)சிப்செட் உடன் ஹானர் ரோபோட் போன் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த போனில் உள்ளது.

MagicOS 10 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு ஹானர் ரோபோட் போன் வெளியாகி உள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹானர் நிறுவனம்.

HONOR ரோபோட் போன் அறிமுகம்.. 7060எம்ஏஎச் பேட்டரி.. என்ன விலை?

200எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 200எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்ட கொண்டுள்ளது ஹானர் ரோபோட் போன். அதுவும் இந்த போனின் மெயின் கேமரா ஆனது கிம்பல் செட்டப் உடன் வெளியாகி உள்ளது. மேலும் இது வினாடிக்கு 360° வரை சுழலும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போனின் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் ஹானர் ரோபோட் போனில் உள்ளது. இந்த செல்பி கேமராவும் 4கே வீடியோ பதிவு செய்யும். இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த புதிய போனில் உள்ளன.

யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) போன்ற வசதிகளும் இந்த ஹானர் ரோபோட் போனில் உள்ளன. IP54 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (IP54 dust and splash resistance) வசதியுடன் இந்த புதிய ஹானர் ரோபோட் போன் வெளியாகி உள்ளது.

5ஜி, வைஃபை 7 802.11 பிஇ, புளூடூத் 6.0, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), கலிலியோ (GALILEO), என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் புதிய ஹானர் ரோபோட் போனில் உள்ளன.

HONOR ரோபோட் போன் அறிமுகம்.. 7060எம்ஏஎச் பேட்டரி.. என்ன விலை?

7060எம்ஏஎச் பேட்டரி உடன் ஹானர் ரோபோட் போன் வெளியாகி உள்ளது. எனவே இந்த போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் வசதிகள் உள்ளன. ஸ்டார் டிரெயில் சில்வர் மற்றும் மூன் ஷேடோ கிரே நிறங்களில் இந்த போனை வாங்கலாம்.

ஹானர் ரோபோட் போன் விலை

12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ஹானர் ரோபோட் போன் விலை 9,999 yuan (இந்திய மதிப்பில் ரூ.1,41,335)-ஆக உள்ளது.
16ஜிபி ரேம் + 1டிபி மெமரி கொண்ட ஹானர் ரோபோட் போன் விலை 12,999 yuan (இந்திய மதிப்பில் ரூ.1,83,740)-ஆக உள்ளது.
ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் ஹானர் ரோபோட் போன் சீனாவில் விற்பனைக்கு வரும்.

Best Mobiles in India

English summary
HONOR Robot Phone with 7060mAh battery launched in China: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X