மார்க்கெட்டே மிரள போகுது.. Honor ரோபோட் போன் ரெடி.. 200MP கேமரா.. 6000mAh பேட்டரி.. எப்போது அறிமுகம்?
ஹானர் நிறுவனம் MWC 2026 ஹானர் ஹானர் ரோபோட் போனை (Honor Robot Phone) காட்சிப்படுத்தியது. இந்நிலையில் இந்த ஹானர் ரோபோட் போனின் அறிமுகம் குறித்த முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது நம்பகமான டிப்ஸ்டர் Digital Chat Station வெளியிட்ட தகவலின்படி இந்த புதிய ஹானர் ரோபோட் போன் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மற்ற போன்களை விட தனித்துவமான வடிவமைப்பு மற்றும் கேமரா வசதிகளைக் கொண்டுள்ளது இந்த புதிய ஹானர் போன். மேலும் ஹானர் ரோபோட் போனின் முக்கிய விவரக்குறிப்புகளும் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இப்போது பார்க்கலாம்.

ஹானர் ரோபோட் போன் அம்சங்கள் (Honor Robot Phone Specifications): 6.3-இன்ச் பிளாட் டிஸ்பிளே (flat display) உடன் இந்த புதிய ஹானர் ரோபோட் போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதன் டிஸ்பிளேவில் அல்ட்ரா ஸ்லிம் பெசல் மற்றும் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் (Snapdragon 8 Elite Gen 5 chipset) உடன் புதிய ஹானர் ரோபோட் போன் அறிமுகமாகும். எனவே இந்த போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

ஹானர் ரோபோட் போனில் 200எம்பி பிரைமரி கேமரா இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் f/1.6 அபர்ச்சர், 23 மிமீ ஃபோகல் லென்த் மற்றும் 4D கிம்பல் ஸ்டேபிலைசேஷன் போன்ற அம்சங்கள் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. இந்த பிரைமரி கேமரா உடன் 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 200எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமராவும் இடம்பெறலாம்.
மேலும், Honor-ன் புதிய Ailai இமேஜிங் தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட இருப்பதாகக் கூறப்படுவதால், புகைப்படத் தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் கேமரா பகுதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹானர் நிறுவனம்.
அதேபோல் மேம்படுத்தப்பட்ட ஏஐ அம்சங்கள் புதிய ஹானர் ரோபோட் போனில் உள்ளன. அதுவும் 16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) போன்ற அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

6000எம்ஏஎச் பேட்டரி உடன் புதிய ஹானர் ரோபோட் போன் வெளிவரும். எனவே இந்த போனை வாங்கினால் சார்ஜ்பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ஹானர் ரோபோட் போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் ஹானர் ரோபோட் போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications