யாரு சாமி அவன்.. 10080mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. MD 8500 Elite சிப்செட் மாடல்!
ஹானர் நிறுவனத்தின் மிகப்பெரிய பேட்டரி கொண்ட மாடலாக ஹானர் பவர்2 (HONOR Power2) ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளது. இப்போது, பேக்கப் மட்டுமல்லாமல், மீடியாடெக் டைமன்சிட்டி 8500 எலைட் (MediaTek Dimensity 8500 Elite) சிப்செட்டுடன் பர்பாமென்ஸ் கொடுக்கும் மாடலாகவும் இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த ஹானர் பவர்2 ஸ்மார்ட்போனின் விவரங்களை பார்க்கலாம்.
சீன மார்கெட்டில் வருகிற ஜனவரி 5 ஆம் தேதி இந்த ஹானர் பவர்2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த தேதி நெருங்கி வருவதால், பீச்சர்களை ஹானர் நிறுவனம் உறுதி செய்து வருகிகிறது. ஏற்கனவே, பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், டிஸ்பிளே மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டன. இப்போது, தரமான பர்ஃபாமென்ஸ் கொண்ட சிப்செட் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் மீடியாடெக் டைமன்சிட்டி 8500 எலைட் (MediaTek Dimensity 8500 Elite) சிப்செட் கிடைக்கிறது. 2.4 மில்லியன் அன்டுடு ஸ்கோர் கொண்டுள்ளது. ஆகவே, கேமிங் பிரியர்களுக்கு பேக்கப் கொடுப்பது மட்டுமல்லாமல், பர்ஃபாமென்ஸையும் இந்த ஹானர் பவர்2 கொடுக்க இருக்கிறது. முன்னதாக இந்த சிப்செட் கிடைக்க இருப்பதாக மார்கெட் வட்டாரங்கள் தெரிவித்தன.
இப்போது, ஹானர் நிறுவனமே இந்த மீடியாடெக் டைமன்சிட்டி 8500 எலைட் சிப்செட் வருவதை உறுதி செய்துள்ளது. ஏற்கனவே, ஹானர் வின் (HONOR WIN) மற்றும் ஹானர் வின் ஆர்டி (HONOR WIN RT) ஆகிய ஸ்மார்ட்போன்கள் 10000mAh பேட்டரி கொண்ட மாடல்களாக அறிமுகம் செய்யப்பட்டன. இப்போது, இந்த மாடல்களைவிட ஹானர் பவர்2 ஸ்மார்ட்போனில் பெரிய பேட்டரி வருகிறது.
ஹானர் பவர்2 அம்சங்கள் (HONOR Power2 Specifications): 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி மெமரி கிடைக்க உள்ளது. 12 ஜிபி விர்ச்சுவல் ரேம் கிடைக்க உள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) இந்த ஹானர் பவர்2 ஸ்மார்ட்போனில் கிடைக்க உள்ளது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 27W ரிவர்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கிறது.
சீன மார்கெட்டில் வெளியான மாடல்களிலேயே அதிக கேபாசிட்டியாக 10080mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரி கிடைத்துள்ளதால், 216 கிராம் எடை உள்ளது. இருப்பினும், 7.98 எம்எம் தடிமன் மட்டுமே கொண்டுள்ளது. 6.79 (2640 x 1200 பிக்சல்கள்) எல்டிபிஎஸ் ஓஎல்இடி (LPTS OLED) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதில் 8000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1.5K ரெசொலூஷன் கிடைத்துள்ளது.
மேலும், 120 Hz ரெசொலூஷன் கொடுத்துள்ளது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் வருகிறது. வீடியோ கால்கள் மற்றும் செல்பீகளுக்காக 16 எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 5 எம்பி அல்ட்ரா வைடு கேமராவை இந்த ஹானர் பவர்2 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது.
ஸ்னோவ் ஒயிட் (Snow White), மிட்நைட் பிளாக் (Midnight Black) மற்றும் சன்ரைஸ் ஆரஞ்ச் (Sunrise Orange) ஆகிய கலர்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சீன மார்கெட்டில் ஜனவரி 5 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு அறிமுகமாக உள்ளது. அந்த நாட்டில் விற்பனைக்கு வந்த பிறகு குளோபல் மார்கெட் மற்றும் இந்திய வெளியீடு குறித்த விவரங்கள் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications








