Home
Mobile

ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே மிரளுது.. 10080mAh பேட்டரி.. OLED டிஸ்பிளே.. 80W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

ஹானர் நிறுவனத்தின் 10080mAh பேட்டரி கொண்ட மாடலாக ஹானர் பவர்2 (HONOR Power2) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும், 80W ஃபாஸ்ட் சார்ஜிங், ஓஎல்இடி டிஸ்பிளே, 12 ஜிபி ரேம், 50 எம்பி கேமரா போன்ற பீச்சர்களும் கிடைக்க இருக்கின்றன. இந்த ஹானர் பவர்2 ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

சீன மார்கெட்டில் 10000mAh பேட்டரி கொண்ட மாடல்களாக ஹானர் வின் (HONOR WIN) மற்றும் ஹானர் வின் ஆர்டி (HONOR WIN RT) ஆகிய மாடல்கள் வெளியாகின. மிகப்பெரிய பேட்டரி கிடைத்ததால், குளோபல் வெளியீட்டின் மீதான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இந்த நேரத்தில் அந்த மாடல்களை தூக்கி சாப்பிடும்படி ஹானர் பவர்2 அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே மிரளுது.. 10080mAh பேட்டரி.. OLED டிஸ்பிளே!

இதில் 10080mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. சீனாவில் வருகிற ஜனவரி 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. பேட்டரி மட்டுமல்லாமல், மீடியாடெக் டைமன்சிட்டி 8500 எலைட் (MediaTek Dimensity 8500 Elite) சிப்செட் மற்றும் ஆரஞ்ச் (Orange), ஒயிட் (White) மற்றும் பிளாக் (Black) கலர்களில் கிடைக்க இருக்கிறது. மற்ற பீச்சர்களும் கிட்டத்தட்ட தெரியவந்துள்ளன.

ஹானர் பவர்2 அம்சங்கள் (HONOR Power2 Specifications): 6.79 (2640 x 1200 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவில் 8000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது. 1.5K ரெசொலூஷன் கொடுத்துள்ளது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 16 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 10080mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைத்துள்ளது. 27W ரிவர்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது.

7.98 எம்எம் தடிமன் கொண்டுள்ளது. 216 கிராம் எடை உள்ளது. மெட்டல் ஃபிரேம் கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்க உள்ளது. மீடியாடெக் டைமன்சிட்டி 8500 எலைட் சிப்செட்டுடன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்க உள்ளது. ஜனவரி 5 ஆம் தேதி சீனாவில் வெளியாக உள்ளது.

முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட ஹானர் வின் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Gen 5 3nm) சிப்செட் கிடைத்தது. மேஜிக்ஓஎஸ் 10 (MagicOS 10) மற்றும் அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா கிடைத்துள்ளது.

மேலும், 50 எம்பி டெலிபோட்டோ கேமரா மற்றும் 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் மேக்ரோ கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவுக்கு ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி வருகிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.83 இன்ச் (1272 x 2800 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கொண்டுள்ளது.

6000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 185Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 10000mAh பேட்டரி கிடைக்கிறது. 80W வயர்லெஸ் சார்ஜிங் உள்ளது. சீன ஸ்மார்ட்போன் மார்கெட்டில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.51,122ஆக இருக்கிறது. ஆகவே, ஹானர் பவர்2 ஸ்மார்ட்போனையும் மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
HONOR Power2 With 10080mAh Battery 80W Fast Charging Launching on January 5 in China
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X