Home
Mobile

நாளைக்கு லான்ச் ஆகும் புது HONOR போன்.. 10080mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. 16ஜிபி ரேம்.. எந்த மாடல்?

ஹானர் நிறுவனம் புதிய ஹானர் பவர்2 (HONOR Power2) ஸ்மார்ட்போன் மாடலை நாளை (ஜனவரி 5) சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட சில வாரங்களில் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

ஹானர் பவர்2 அம்சங்கள் (Honor Power2 specifications): 6.79 ஃபுல் எச்டி பிளஸ் எல்டிபிஎஸ் ஓஎல்இடி (LPTS OLED) டிஸ்பிளேவை கொண்டுள்ளது ஹானர் பவர்2 ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 8000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2640 x 1200 பிக்சல்கள், 1.5K ரெசொலூஷன், 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

நாளைக்கு லான்ச் ஆகும் புது HONOR போன்.. 10080mAh பேட்டரி..  எந்த மாடல்

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 8500 எலைட் (MediaTek Dimensity 8500 Elite) சிப்செட் உடன் ஹானர் பவர்2 ஸ்மர்ட்போன் அறிமுகமாகும். மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் தராமன கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த ஹானர் பவர்2 போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் ஹானர் பவர்2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு ஹானர் பவர்2 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் ஹானர் பவர்2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆகவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் உள்ளன.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியுடன் ஹானர் பவர்2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் IP65 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த புதிய ஹானர் ஸ்மார்ட்போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

10080mAh பேட்டரி வசதியுடன் ஹானர் பவர்2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு அல்லது மூன்று நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 27W ரிவர்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன.

அதேபோல் 216 கிராம் எடை கொண்டுள்ளது ஹானர் பவர்2 ஸ்மார்ட்போன். மேலும் ஸ்னோவ் ஒயிட் (Snow White), மிட்நைட் பிளாக் (Midnight Black) மற்றும் சன்ரைஸ் ஆரஞ்ச் (Sunrise Orange) நிறங்களில் இந்த போன் வெளியாகும். குறிப்பாக இந்த போன் நாளை மாலை 7.30 மணி அளவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹானர் பவர்2 ஸ்மார்ட்போன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor Power2 to be launched in China tomorrow: check specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X