Home
Mobile

8000mAh பேட்டரி, 80W சார்ஜிங், சாட்டிலைட் கனெக்டிவிட்டி. .7000mAh போன்களை அடித்து நொறுக்கிய Honor Power போன்!

சில மாதங்களுக்கு முன்னர் எந்த ஸ்மார்ட்போனை எடுத்தாலும் "ஏஐ கேமரா" (AI Camera) என்கிற டேக்லைனை பார்க்க முடிந்தது. தற்போது அது வழக்கமாகி விட்டது. இதேபோல "விர்ச்சுவல் ரேம்" (Virtual RAM) என்கிற அம்சம் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டது. தற்போது அதுவும் ஒரு வழக்கமாக அம்சமாகி விட்டது.

அந்த வரிசையில் இப்போது எங்கு திரும்பினாலும் 7000+ mAh பேட்டரி ஸ்மார்ட்போன்களை தான் பார்க்க முடிகிறது. எல்லாவற்றிற்கும் காரணம் - 7300mAh பேட்டரி உடன் அறிமுகமான ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போன் தான் காரணம். அடுத்த சில மாதங்களில் இதுவும் வழக்கமாகி விடும் என்று யூகித்து முடிப்பதற்குள்.. "இருங்க பாய்" என்கிற பாணியில் ஹானர் நிறுவனம் 8000mAh பேட்டரி போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

8000mAh பேட்டரி, சாட்டிலைட் கனெக்டிவிட்டி.. Honor Power போன்!

நாளை, அதாவது ஏப்ரல் 15 ஆம் தேதியன்று ஹானர் நிறுவனம் ஒரு புத்தம் புதிய ஸ்மார்ட்போன் சீரீஸை சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய பவர் சீரிஸின் கீழ் முதல் மாடல் ஆக - ஹானர் பவர் (Honor Power) என்கிற ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய 8,000mAh பேட்டரியை பேக் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஹானர் பவர் ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? சீனாவின் 3சி லிஸ்டிங் மற்றும் எம்ஐஐடி சான்றிதழ்களின்படி, ஹானர் பவர் ஸ்மார்ட்போன் ஆனது 80W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் செயற்கைக்கோள் இணைப்பை ஆதரிக்கும்.மேலும் ஹானர் பவர் ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட்டை கொண்டிருக்கலாம்.

அதிகாரப்பூர்வ டீஸர்களின்படி, ஹானர் பவர் ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவில் மையமாக சீரமைக்கப்பட்ட டேப்லெட் வடிவிலான கட்அவுட் இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் ஒரு பெரிய பேட்டரி யூனிட்டை கொண்டிருந்தாலும் திடமான கட்டமைப்பு மற்றும் ஸ்லிம் ஆன வடிவமைப்பை கொண்டிருக்கும் என்பதை தனித்தனி டீஸர்கள் மூலம் ஹானர் உறுதிப்படுத்தியுள்ளது

இதுதவிர்த்து ஹானர் பவர் ஸ்மார்ட்போனை பற்றிய மீதமுள்ள அம்சங்கள் குறித்து எந்த விவரங்களும் இல்லை. மேலும் 8000எம்ஏஎச் பேட்டரி உடன் வரும் ஹானர் பவர் ஸ்மார்ட்போன் ஆனது சீன சந்தைக்கு வெளியே (அதாவது இந்திய சந்தையில்) அறிமுகப்படுத்தப்படுமா என்பது குறித்தும் எந்த தெளிவான தகவலும் இல்லை.

7200mAh பேட்டரி உடன் வரும் ரியல்மி ஜிடி 7 ஸ்மார்ட்போன்: ரியல்மியின் அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன ரியல்மி ஜிடி 7 (Realme GT 7) மாடல் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது நிச்சயம் இந்தியாவிலும் அறிமுகமாகும். ஏனென்றால் ரியல்மி ஜிடி 6 மாடல் இந்தியாவில் அறிமுகமானது. இது 100W பாஸ்ட் சார்ஜிங் உடனான 7200mAh பேட்டரி உடன் வரும் என்பதை ரியல்மி நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது.

பெரிய அளவிலான பேட்டரியை செய்தாலும் கூட, இந்த ஸ்மார்ட்போன் 8.25மிமீ என்கிற அளவிலான மிகவும் ஸ்லிம் ஆன டிசைனையும் மற்றும் எடையில் 203 கிராமும் மட்டுமே இருக்கும் என்பதையும் ரியல்மி உறுதிப்படுத்தியுள்ளது. நினைவூட்டும் வண்ணம் ரியல்மி ஜிடி 6 ஸ்மார்ட்போன் ஆனது 5500mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது 8.6மிமீ டிசைனை கொண்டுள்ளது

7000mAh பேட்டரி உடன் வரும் ஷாவ்மீ 16 ஸ்மார்ட்போன்: லேட்டஸ்ட் லீக்ஸ் ஒன்று ஷாவ்மீ 16 ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite 2 ) அல்லது டைமன்சிட்டி 9500 (Dimensity 9500) சிப்பை கொண்டிருக்கும் என்றும்.. இது 7000mAh பேட்டரியுடன் இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கிறது. இது உண்மையாக இருந்தால் ஷாவ்மீ 15 ஸ்மார்ட்போனில் நாம் கண்ட 5400mAh பேட்டரி உடன் ஒப்பிடும் போது இது குறிப்பிடத்தக்க மேம்படுத்தலாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
Honor Power Smartphone May Pack Biggest 8000mAh Battery Launching on April 15
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X