Home
Mobile

அடிச்சான் பாரு Honor.. 8000mAh பேட்டரி, 50எம்பி கேமரா.. புதிய 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்? என்ன விலை?

ஹானர் பவர் (Honor Power) ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்துள்ளது ஹானர் நிறுவனம். 8000mAh பேட்டரி, 50எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த ஹானர் பவர் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஹானர் பவர் அம்சங்கள் (HONOR Power Specifications): 6.78-இன்ச் ஃபுல் எச்டி அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் ஹானர் பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 4000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (4,000 nits peak brightness), 100 % டிசிஐ-பி3 கலர் காமட் (DCI-P3 Color Gamut) மற்றும் பல அம்சங்கள் உள்ளன.

அடிச்சான் பாரு Honor.. 8000mAh பேட்டரி,  50எம்பி கேமரா.. எந்த மாடல்?

குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட்(Qualcomm Snapdragon 7 Gen 3 SoC) உடன் இந்த புதிய ஹானர் பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த புதிய போனில் உள்ளது. எனவே இதில் சிறந்த கேமிங் அனுபவம் கிடைக்கும்.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் மேஜிக்ஓஎஸ் 9.0 (MagicOS 9.0) மூலம் இந்த ஹானர பவர் போன் இயங்குகிறது. அதேபோல் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் இந்த புதிய ஹானர் விற்பனைக்கு வரும்.

OIS ஆதரவு கொண்ட 50எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ஹானர் பவர் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்டுள்ளது இந்த ஹானர் போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும்
என்றே 16எம்பி கேமரா இதில் உள்ளது.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

8000mAh பேட்டரி உடன் ஹானர் பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் தரும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 66W சூப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperCharge fast charging) வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடிச்சான் பாரு Honor.. 8000mAh பேட்டரி,  50எம்பி கேமரா.. எந்த மாடல்?

ஸ்னோ ஒயிட் (Snow White), பாண்டம் நைட் பிளாக் (Phantom Night Black) மற்றும் டெசர்ட் கோல்ட் ( Desert Gold நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். மேலும் இந்த போனின் எடை 209 கிராம் ஆகும்.

ஆனால் தற்போது ஹானர் பவர் ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த புதிய ஹானர் பவர் ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.23,310-ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor Power launched with 8000mAh battery: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X