Home
Mobile

இமாலய 12000mAh பேட்டரி உடன் புது போன்.. மொத்த மார்க்கெட்டையும் தெறிக்க விட்ட மொபைல் பிராண்ட்!

சீனாவில், ஹானர் (Honor) நிறுவனம் அதன் இரண்டு பிரபலமான ஸ்மார்ட்போன் சீரிஸின் கீழ் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபரில் ஹானர் மேஜிக் 9 சீரிஸையும், அதை தொடர்ந்து இந்த ஆண்டின் இறுதியில் செயல்திறனை மையமாக கொண்ட ஹானர் வின் 2 சீரிஸ் போன்களையும் இந்த பிராண்ட் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் 10080mAh பேட்டரியுடன் அறிமுகமான ஹானர் பவர் 2 ஸ்மார்ட்போனின் நெக்ஸ்ட் ஜெனரேஷன் மாடலாக ஹானர் பவர் 3 மாடலை, இந்நிறுவனம் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. பவர் 2, ஜனவரி 2026-இல் அறிவிக்கப்பட்டதை கருத்தில் கொண்டால், பவர் 3 அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமாக வாய்ப்புள்ளது.

12000mAh பேட்டரி உடன் புது போன்.. தெறிக்க விட்ட மொபைல் பிராண்ட்!

எதிர்பார்க்கப்படும் வெளியீட்டிற்கு வெகு முன்னதாகவே, டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Tipter Digital Chat Station) வழியாக ஹானர் பவர் 3 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் லீக் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஹானர் பவர் 3 ஸ்மார்ட்போன் ஆனது நெக்ஸ்ட் ஜெனெரஷன் டியாடெக் டைமென்சிட்டி 8600 சீரிஸ் சிப்செட்டை கொண்டிருக்கக்கூடும்.
இதே சிப்செட் ரெட்மி டர்போ 6 (Redmi Turbo 6) மற்றும் போக்கோ எக்ஸ்9 ப்ரோ (Poco X9 Pro) போன்ற ஸ்மார்ட்போன்களிலும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும் இது பேட்டரி லைஃப் மற்றும் செயல்திறனில் அதிக கவனம் செலுத்தி, மிட்-ரேன்ஜ் விலைப்பிரிவை இலக்காக கொண்டிருக்கலாம் என்றும் தெரிகிறது. ஒரு ஆரம்பகட்ட இன்ஜினியரிங் ப்ரோட்டோடைப்பில் (engineering prototype), இது 2.5டி கிளாஸ் உடனான 6.8-இன்ச் 1.5கே LTPS பிளாட் டிஸ்பிளேவுடன் காணப்பட்டதாக மேற்குறிப்பிட்ட டிப்ஸ்டர் கூறுகிறார்

மேலும் இதன் மிகப்பெரிய சிறப்பம்சங்களில் ஒன்றாக கூறப்படும் பேட்டரி திறன் - 10000mAh-ஐ தாண்டக்கூடும் என்றும், ஹானர் நிறுவனம் 11,000mAh முதல் 12,000mAh வரையிலான பேட்டரி அளவை இலக்காக கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. 12000mAh என்பது உண்மையாகும் பட்சத்தில், ஒரு பிரதான ஸ்மார்ட்போனில் இதுவரை பயன்படுத்தப்பட்டதிலேயே அதிக திறன் கொண்ட பேட்டரிகளில் இதுவும் ஒன்றாக அமையும். ஆனால் இது இந்திய சந்தைக்கு வருமா என்பது தான் மிகப்பெரிய கேள்வி.

ஹானரை தவிர, ரியல்மி, ஒன்பிளஸ் மற்றும் விவோ போன்ற பிற ஆண்ட்ராய்டு பிராண்டுகளும் சமீபத்தில் அதிக பேட்டரி திறன் கொண்ட புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி உள்ளன. ஒன்பிளஸின் சமீபத்திய அறிமுகமான ஒன்பிளஸ் நார்ட் 6 மாடலில் 9,000mAh பேட்டரி உள்ளது. இதேபோல ரியல்மியின் லேட்டஸ்ட் மாடல்களில் ஒன்றான ரியல்மி சி100 4ஜி ஸ்மார்ட்போன் 8,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

இப்போது உள்ள ஹானர் பவர் 2 ஸ்மார்ட்போன் ஆனது, இந்த ஆண்டு ஜனவரி மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 10,080mAh பேட்டரி, 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 27W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் ஆகியவற்றுக்கான ஆதரவுடன் வருகிறது. இந்த பேட்டரி, ஒரே சார்ஜில் 14.2 மணிநேரம் வரை கேமிங் நேரத்தையும், 17.3 மணிநேரம் வரை நேவிகேஷன் நேரத்தையும் வழங்கும் என விளம்பரப்படுத்தப்படுகிறது.

இதற்கும் முன்னதாக அறிமுகம் ஆன ஹானரின் வின் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது, 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 10,000mAh பேட்டரியுடன் வருகிறது. இந்த பேட்டரி, ஒரே சார்ஜில் 16.4 மணிநேரம் வரை தொடர்ச்சியான கேமிங் நேரத்தையும், 31.3 மணிநேரம் வீடியோ ஸ்ட்ரீமிங் நேரத்தையும் வழங்கும் என்று கூறப்படுகிறது. ஸ்டாண்டர்ட் ஹானர் வின் மாடல் ஆனது 80W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.


Article Corrections

Changed spelling mistake in title.
Best Mobiles in India

English summary
Honor Power 3 With 3nm Dimensity 8600 chip 12000mAh Battery Launching beginning of next year Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X