Honor அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்.. 10080mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?
ஹானர் நிறுவனம் தனது புதிய ஹானர் பவர் 2 ஸ்மார்ட்போனை இன்று சீனாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. அதுவும் இந்த ஸ்மார்ட்போன் மிகப் பெரிய பேட்டரி, டைமன்சிட்டி சிப்செட், ஓஎல்இடி டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
ஹானர் பவர் 2 அம்சங்கள் (Honor Power 2 specifications): 6.79 ஃபுல் எச்டி பிளஸ் எல்டிபிஎஸ் ஓஎல்இடி (LTPS OLED) டிஸ்பிளேவை கொண்டு ஹானர் பவர் 2 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 8000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2640 x 1200 பிக்சல்கள், 1.5K ரெசொலூஷன், 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

மீடியாடெக் டைமன்சிட்டி 8500 எலைட் (MediaTek Dimensity 8500 Elite) சிப்செட் உடன் ஹானர் பவர் 2 ஸ்மர்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் மாலி ஜி720 எம்சி8 ஜிபியு (Mali-G720 MC8 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது. இதுதவிர டூயல் விசி வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம் ஆதரவும் இந்த போனில் உள்ளது.
12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் ஹானர் பவர்2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மேஜிக்ஓஎஸ் 10 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு ஹானர் பவர் 2 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
50எம்பி மெயின் கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் ஹானர் பவர் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் உள்ளன.
IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் + IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் ஹானர் பவர் 2 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன.
10080mAh பேட்டரி வசதியுடன் ஹானர் பவர் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு அல்லது மூன்று நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 27W ரிவர்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன.

5ஜி, வைஃபை 6, புளூடூத் 6.0, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் ஸ்னோவ் ஒயிட் (Snow White), மிட்நைட் பிளாக் (Midnight Black) மற்றும் சன்ரைஸ் ஆரஞ்ச் (Sunrise Orange) நிறங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது.
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஹானர் பவர் 2 ஸ்மார்ட்போனின் விலை CNY 2,699 (இந்திய மதிப்பில் ரூ.34,820)-ஆக உள்ளது. பின்பு இதன் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை CNY 2,999 (ரூ.38,694)-ஆக உள்ளது. ஜனவரி 9-ம் தேதி இந்த போன் சீனாவில் விற்பனைக்கு வருகிறது. அதேபோல் இந்த போன் கூடிய விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








