ஒரமா ஒத்துங்க மொத்தமா.. 10000mAh பேட்டரி, 50MP கேமரா, AMOLED டிஸ்பிளே.. புது HONOR போன்.. எந்த மாடல்?
ஹானர் நிறுவனம் மட்டுமல்லாமல், ஸ்மார்ட்போன்களிலேயே அதிக பேட்டரி கேபாசிட்டி கொண்ட மாடலாக ஹானர் பவர் 2 (HONOR Power 2) அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், கேமரா, சிப்செட் உள்ளிட்ட பீச்சர்களும் வெளியாகி இருக்கிறது. இந்த ஹானர் பவர் 2 ஸ்மார்ட்போனின் விவரங்களை பார்க்கலாம்.
சீன மார்கெட்டில் 8000mAh பேட்டரி கொண்ட மாடலாக ஹானர் பவர் ஸ்மார்ட்போன் வெளியாகியது. இப்போது, 10000mAh பேட்டரியுடன் ஹானர் பவர் 2 வெளியாக இருப்பதாக சீன மார்கெட் தெரிவிக்கிறது. டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக முக்கியான பீச்சர்கள் கசிந்துள்ளன. அதேபோல விலை மற்றும் வெளியீட்டு விவரங்களும் கசிந்துள்ளன.

ஹானர் பவர் 2 அம்சங்கள் (HONOR Power 2 Specifications): கேமிங் பிரியர்கள் விரும்பும்படியான மீடியாடெக் டைமன்சிட்டி 8500 (MediaTek Dimensity 8500) சிப்செட் கொண்ட மாடலாக இந்த ஹானர் பவர் 2 ஸ்மார்ட்போன் வருகிறது. 6.79 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவுக்கு 1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கிறது.
10000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனாக இந்த ஹானர் பவர் 2 இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 16 எம்பி செல்பீ கேமராவை கொடுத்துள்ளது. ஸ்னோவ் ஒயிட் (Snow White), மிட்நைட் பிளாக் (Midnight Black) மற்றும் சன்ரைஸ் ஆரஞ்ச் (Sunrise Orange) ஆகிய கலர்களில் வருகிறது. ரூ.28,360 பட்ஜெட்டில் சீன மார்கெட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்த ஹானர் பவர் 2 ஸ்மார்ட்போனின் வெளியீடு இருக்க வாய்ப்புள்ளது. மற்ற மார்கெட்களில் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் இருந்து எதிர்பார்க்கலாம். ஏனென்றால், ஹானர் பவர் ஸ்மார்ட்போன் ஏப்ரல் மாதத்தில் வெளியாகியது. ஆகவே, இந்த மாதங்களில் கண்டிப்பாக ஹானர் பவர் 2 ஸ்மார்ட்போன் வெளியாக வாய்ப்புகள் இருக்கிறது.
ஹானர் பவர் அம்சங்கள் (HONOR Power Specifications): முன்னதாக வெளியான இந்த ஸ்மார்ட்போனுக்கு குவால்காம் ஸ்னாப்டிராகழ் 7 ஜென் 3 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 3 4nm) சிப்செட் கிடைக்கிறது. அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்ட்டை இந்த ஹானர் பவர் ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் மற்றும் மேஜிக்ஓஎஸ் 9.0 கொண்டுள்ளது.
6.78 இன்ச் (2700 x 1224 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. மேலும், 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுத்துள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்டுள்ளது. மேலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் வெளியாகி இருக்கிறது.
50 எம்பி மெயின் கேமரா மற்றும் 5 எம்பி அல்ட்ரா வைடு கேமராவை இந்த ஹானர் பவர் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 16 எம்பி செல்பீ கேமராவை இந்த ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 66W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 8000mAh பேட்டரி கிடைத்துள்ளது.
மேலும், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டைப்-ஆடியோ உள்ளது. ஸ்னோவ் ஒயிட் (Snow White), பேண்டம் நைட் பிளாக் (Phantom Night Black) மற்றும் டெசர்ட் கோல்டு (Desert Gold) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.24,000 பட்ஜெட்டில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications








