Home
Mobile

தூள் கிளப்பும் Honor.. 10,000mAh பேட்டரி.. ஒஎல்இடி டிஸ்பிளே.. வருகிறது புதிய போன்.. எந்த மாடல்?

ஹானர் நிறுவனம் தற்போது ஹானர் பவர் 2 ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் ஹானர் பவர் 2 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் வெளியாகி உள்ளது.

ஹானர் பவர் 2 அம்சங்கள் (Honor Power 2 Specifications): 10,000mAh பேட்டரி உடன் இந்த ஹானர் பவர் 2 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தகவல்கள் கசிந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்த போன் பேட்டரி பேக்கப் தரும்.

தூள் கிளப்பும் Honor.. 10,000mAh பேட்டரி..  வருகிறது புதிய போன்..

அதேபோல் இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் பேட்டரி வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹானர் நிறுவனம்.

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 8500 (MediaTek Dimensity 8500) சிப்செட் வசதியுடன் இந்த புதிய ஹானர் பவர் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

1.5கே எல்டிபிஎஸ் பிளாட் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் ஹானர் பவர் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 4000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (4,000 nits peak brightness) உள்ளிட்ட அம்சங்களும் உள்ளன. தற்போது ஹானர் பவர் 2 போனின் சில அம்சங்கள் மட்டுமே வெளியாகி உள்ளன. விரைவில் இந்த போனின் அம்சங்களும் வெளியாகும். மேலும் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ஹானர் பவர் போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

ஹானர் பவர் அம்சங்கள் (HONOR Power Specifications): தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட்(Qualcomm Snapdragon 7 Gen 3 SoC) உடன் இந்த புதிய ஹானர் பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த புதிய போனில் உள்ளது. எனவே இதில் சிறந்த கேமிங் அனுபவம் கிடைக்கும்.

அதேபோல் 6.78-இன்ச் ஃபுல் எச்டி அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் ஹானர் பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 4000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (4,000 nits peak brightness), 100 % டிசிஐ-பி3 கலர் காமட் (DCI-P3 Color Gamut) மற்றும் பல அம்சங்கள் உள்ளன.

குறிப்பாக ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் மேஜிக்ஓஎஸ் 9.0 (MagicOS 9.0) மூலம் இந்த ஹானர பவர் போன் இயங்குகிறது. அதேபோல் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் இந்த புதிய ஹானர் விற்பனைக்கு வரும்.

50எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ஹானர் பவர் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்டுள்ளது இந்த ஹானர் போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இதில் உள்ளது.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

ஹானர் பவர் ஸ்மார்ட்போன் 8000mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் தரும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 66W சூப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperCharge fast charging) வசதியும் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor Power 2 smartphone to launch with 10000mAh battery: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X