பட்ஜெட் விலையில் - ஜிபியு டர்போ டெக் தொழில்நுட்பத்துடன் மிரட்டும் ஹானர் பிளே.!
பட்ஜெட் விலையில் இந்திய சந்தையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கிடைக்கும் ஒரே ஸ்மார்ட் போன் ஹானர் பிளே மட்டும் தான்.
இந்திய சந்தையில் குறைந்த விலை சூப்பர் ஸ்மார்ட் போன் மாடல்களுக்கே அதிக வரவேற்பிருக்கிறது. பட்ஜெட் விலையில் சிறந்த அம்சங்களுடன் கூடிய ஒரு சூப்பர் ஸ்மார்ட் போன்களை பயனர்களுக்கு வழங்க அனைத்து நிறுவனங்களும் போட்டியிட்டு கொண்டிருக்கிறது.
பயனர்களின் தேவைகளை அறிந்து, அவற்றைப் பூர்த்தி செய்யும் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யும் நிறுவனம் மட்டுமே இந்தியா சந்தையில் தாக்கு பிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஹானர் நிறுவனம் தனது பயனர்களின் தேவைகளை நன்கு அறிந்து அவற்றைப் பூதி செய்யும் சூப்பர் ஸ்மார்ட்போன்களை சந்தையில் வெளியிட்டு தனக்கென்று ஒரு தனி இடத்தைத் தக்கவைத்திருக்கிறது.

பட்ஜெட் விலையில்
ஹானர் படைப்புகளில் பட்ஜெட் விலையில் தற்பொழுது வெளியிடப்பட்டிருக்கும் சூப்பர் ஸ்மார்ட் போன் தான் ஹானர் பிளே, உங்களின் பட்ஜெட் விலையில் இந்திய சந்தையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கிடைக்கும் ஒரே ஸ்மார்ட் போன் ஹானர் பிளே மட்டும் தான்.
கேமர்களுக்காக பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த ஹானர் பிளே, சிறந்த ஆற்றல் சேவை மற்றும் அட்டகாசமான செயல்திறன் அனுபவத்தைப் பயனர்களுக்கு வழங்க புதிய ஜிபியு டர்போ டெக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளது. இத்துடன் கூடுதலாக மல்டி டாஸ்கிங், சிறந்த கேமரா, மென்பொருள் மற்றும் பாதுகாப்பு போன்ற அனைத்துச் சேவைகளையும் பட்ஜெட் விலையில் வழங்குகிறது என்பது கூடுதல் சிறப்பு.
ஹானர் பிளே, 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு கொண்ட வேரியண்ட் இன் இந்திய விலை ரூ,19,990 என்பதும், இந்த புதிய ஸ்மார்ட் போன் இன் துவக்க விற்பனையின் பொழுது வெறும் 20 வினாடிகளில் அனைத்து யூனிட்களையும் விற்றுத் தீர்த்து அமேசான் விற்பனையில் ஒரு புதிய சாதனையைப் படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிபியு டர்போ டெக் டெக்னாலஜி:
ஹானர் பிளே ஸ்மார்ட் போன் பிரத்தியேகமாக கேமர் பயன்பாட்டிற்கு தயாரிக்கப்பட்டது. சிறந்த உயர் தினர் கிராபிக்ஸ் கொண்ட கேமிங் அனுபவத்திற்குச் சிறந்த ஜிபியு ஆற்றல் திறன் தேவை, சிறந்த கேமிங் அனுபவத்தைப் பயனர்களுக்கு வழங்குவதற்காக ஜிபியு மாலி ஜி72 எம்பி12(GPU- Mali G72 MP12) பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி கூடுதல் சூப்பர் கேமிங் அனுபவத்தை முழு கட்சி திரையில் வழங்க புதிய ஜிபியு டர்போ டெக் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

சிறந்த ஆற்றலுக்கான ஏ.ஐ மல்டி டாஸ்கிங்:
ஹானர் பிளே ஸ்மார்ட் போன் ஹானர் நிறுவனத்தின் கிரின் 970 ஏ.ஐ ப்ராசஸர் பயன்படுத்தியுள்ளது. இந்த ப்ராசஸர் 10nm அளவிலான 5.5 பில்லியன் ட்ரான்ஸிஸ்டர் கொண்ட ஒரு சதுர சென்டிமீட்டர் அளவு கொண்ட சிப்செட் என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் ஸ்மார்ட்போன் இன் சிறந்த, புகைப்பட சேவை, வீடியோ எடிட்டிங், பிரௌசிங், கேமரா பயன்பாடு, பேட்டரி செயல்திறன், வாய்ஸ் அழைப்பு / செய்தி மற்றும் பிற வழக்கமான பணிகளைப் சிறந்த முறையில் வழங்குவதற்குப் பிரத்தியேக ஏ.ஐ சிப்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே மற்றும் 3டி சவுண்ட் எபெக்ட் அனுபவம்:
6.3 இன்ச் முழு எச்டி பிளஸ் உடன் கூடிய 2340 x 1080 பிக்சல் கொண்ட 19.5:9 விகித இன்பினிட்டி நாட்ச் டிஸ்பிளே. சிறந்த காட்சி திரை அனுபவத்திற்கு முழு எச்.டி இன்பினிட்டி நாட்ச் டிஸ்பிளே இத்துடன் பயன்ரக்ளுக்கு 3டி சவுண்ட் எபெக்ட் அனுபவத்தை வழங்குகிறது.

அண்ட்ராய்டு ஓரியோ அடிப்படையிலான இஎம்யுஐ 8.1:
ஹானர் பிளே அண்ட்ராய்டு 8.1 ஓரியோ அடிப்படையிலான இஎம்யுஐ 8.1 இயங்குதளத்துடன் களமிறங்கியுள்ளது. இந்த அதிநவீன இயங்காலத்தின் உதவியுடன் உங்களுக்கான மல்டி டாஸ்கிங் அனுபவம் மற்றும் ஸ்ப்ளிட் ஸ்கிரீன் அனுபவம் போன்ற அனைத்து விதமான அனுபவத்தையும் லேக்(Lag) இல்லாமல் சிறப்பாக வழங்குகிறது. ஹானர் பிளே ஸ்மார்ட்போன் இன் "ட்வின்" ஆப் சேவை மூலம் ஒரே நேரத்தில் இரண்டு அக்கௌன்ட்களை ஓபன் செய்து பயனர் பயன்படுத்த முடியும் என்பது கூடத்தல் சிறப்பு.

மிரட்டலான ஏ.ஐ டூயல் கேமரா:
ஹானர் பிளே ஸ்மார்ட் போன் இல் 16 மெகா பிக்சல் மற்றும் 2 மெகா பிக்சல் ஏ.ஐ டூயல் பின்னங் கேமராவுடன் வருகிறது. இந்த பின் ஏ.ஐ கேமரா 22 வெவ்வேறு பிரிவுகளில் 500 க்கும் மேற்பட்ட புகைப்பட மோட் மூலம் சிறந்த அனுபவத்தை வழங்குகிறது. 16 மெகா பிக்சல் ப்ரண்ட் பேஸிங் கேமரா உங்களுக்கான சிறந்த செல்பி, போக்கே எபிபிச்ட் மற்றும் அட்டகாசமான வெவ்வேறு ஸ்டுடியோ மோட் மூலம் மிரட்டலான போட்டோகிராஃபி அனுபவத்தை வழங்குகிறது.

பேஸ் அன்லாக்:
பாதுகாப்பிற்கான முயற்சிகளைச் சிறந்த முறையில் வழங்குவதற்கு ஹானர் நிறுவனம் எடுத்த பெரும் முயற்சி தான் பேஸ் அன்லாக். சிறந்த பேஸ் அன்லாக்கிங் சேவைக்குச் சிறந்த கேமரா சேவை பயன்படுத்தப்பட்டுள்ளது. நுண்ணறிவு இயந்திரமானது கற்றல் வழிமுறையின் படி பேஸ் அன்லக்கிங் சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
பாஸ்ட் சார்ஜிங் சேவை:
ஹானர் பிளே ஸ்மார்ட் போன் இல் 3,750 எம்.ஏ.எச் பேட்டரி வழங்கப்பட்டிருக்கிறது. கேமிங் அனுபவத்திற்காக நீடித்து உழைக்கும் பாட்டரி அனுபவத்திற்காகப் பிரத்தியேகமாக ஹானர் பிளே இன் பேட்டரி தயாரிக்கப்பட்டுள்ளது. சூப்பர் லாங் லாஸ்டிங் மற்றும் பாஸ்ட் சார்ஜிங் சேவை இந்த ஸ்மார்ட் போன் இல் வழுக்கப்பட்டிருக்கிறது. பட்ஜெட் விலையில் இதனைச் சேவைகளையும் வழங்கும் இந்த ஆண்டிற்கான சூப்பர் கேமிங் ஸ்மார்ட் போனாக ஹானர் பிளே திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications