Home
Mobile

மிரண்டுபோன மார்க்கெட்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. அறிமுகமானது புது Honor போன்.. எந்த மாடல்?

ஹானர் நிறுவனம் தனது புதிய ஹானர் பிளே 9டி (Honor Play 9T) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆனது 6000mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் சிப்செட், 50எம்பி கேமரா மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது ஹானர் பிளே 9டி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஹானர் பிளே 9டி அம்சங்கள் (Honor Play 9T Specifications): 6.6-இன்ச் எச்டி பிளஸ் டிஎப்டி எல்சிடி டிஸ்பிளே உடன் ஹானர் பிளே 9டி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதிகள் உள்ளன. குறிப்பாக பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மிரண்டுபோன மார்க்கெட்.. அறிமுகமானது புது Honor போன்.. எந்த மாடல்?

அதேபோல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 எஸ்ஒசி (Qualcomm Snapdragon 4 gen 2 SoC) சிப்செட் உடன் ஹானர் பிளே 9டி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். அதேபோல் மேஜிக் ஒஎஸ் 8 (Magic OS 8) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14 OS) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.

50எம்பி பிரைமரி கேமரா (8எக்ஸ் டிஜிட்டல் ஜூம்) + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய ஹானர் பிளே 9டி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த ஹானர் பிளே 9டி ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம்+ 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி ஆகிய மூன்று வேரியண்ட்களில் ஹானர் பிளே 9டி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளன.

ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res audio) உடன் ஹானர் பிளே 9டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) கொண்டுள்ளது இந்த புதிய ஹானர் பிளே 9டி போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹானர் நிறுவனம்.

6000mAh பேட்டரி உடன் ஹானர் பிளே 9டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 35W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

மிரண்டுபோன மார்க்கெட்.. அறிமுகமானது புது Honor போன்.. எந்த மாடல்?

குறிப்பாக வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது ஹானர் பிளே 9டி . அதேபோல் இந்த போன் தற்போது சீனாவில் மட்டும் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, விரைவில் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் இந்த புதிய ஹானர் பிளே 9டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஹானர் பிளே 9டி ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 999 Yuan (இந்திய மதிப்பில் ரூ.11,800)-ஆக உள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ஹானர் ஸ்மார்ட்போன் கம்மி விலையில் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Honor Play 9T With 50MP Camera 6000mAh Battery Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X