தெறிக்குது பட்ஜெட்.. வெறும் ரூ.12,000 போதும்.. 16GB ரேம்.. 50MP கேமரா.. 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?
வெறும் ரூ.12,000 பட்ஜெட்டில் 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 6000mAh பேட்டரி, 35W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா போன்ற மிட்-பிரீமியம் அம்சங்களை கொண்ட ஹானர் ப்ளே 8டி (HONOR Play 8T) போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஹானர் ப்ளே 8டி அம்சங்கள் (HONOR Play 8T Specifications): இந்த ஹானர் போனில் 6.8 இன்ச் (2412 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (Full HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 850 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

இந்த ஹானர் மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் மேஜிக்ஓஎஸ் 7.2 (MagicOS 7.2) கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6080 6nm) சிப்செட் மற்றும் மாலி-ஜி57 எம்சி2 ஜிபியு ( Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
இந்த போனில் 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி ஆகிய இரண்டு வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. மேலும், மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் வருகிறது. இந்த போன் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொண்டிருக்கிறது.
ஆகவே, எல்இடி பிளாஷ் லைட்டுடன் கூடிய 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா சென்சார் வருகிறது. அதேபோல 8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதுவொரு பட்ஜெட் மாடல் என்பதால், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வருகிறது. அதேபோல 3.5எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கொடுக்கப்பட்டுள்ளது.
அதோடு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) உள்ளிட்டவை வருகின்றன. இந்த போனில் 35W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) சார்ஜிங் போர்ட் வருகிறது. இந்த பேட்டரியோடு சேர்த்து வெறும் 199 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது.
இந்த போனில் 5ஜி எஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ, வை-பை 802, ப்ளூடூத் 5.1 மற்றும் ஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. இந்த ஹானர் பிளே 8டி போன் மிட்நைட் பிளாக் (Midnight Black), இங்க் ஜேட் கிரீன் (Ink Jade Green) மற்றும் ஸ்ட்ரீமிங் சில்வர் (Streaming Silver) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
இந்த ஹானர் போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.12,520 ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.14,930ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் சீனாவில் விற்பனைக்கு வந்து, மிகப்பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.
இவ்வளவு மலிவான விலையில், 12 ஜிபி ரேம், 6000mAh பேட்டரி, 256 ஜிபி மெமரி போன்ற அம்சங்களை கொண்டிருப்பதால், மற்ற நாடுகளில் இருக்கும் ஹானர் பிரியர்கள், இந்த போன் குறித்த அறிவிப்புக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே, ஹானர் நிறுவனம் இந்தியாவில் மீண்டும் விற்பனையை தொடங்கிவிட்டது.
இதுபோன்ற பட்ஜெட் போனுக்கு இந்திய மார்கெட்டில் மிகப்பெரும் வரவேற்பு கிடைக்கும் என்பதால், அந்த போனை ஹானர் நிறுவனம் இங்கு வெளியிடும் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே, அடுத்த சில வாரங்களில் இந்த ஹானர் பிளே 8டி போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








