6000mAh பேட்டரி.. 12GB ரேம்.. 50MP கேமரா.. நாளைக்கு லான்ச் ஆகும் புது ஹானர் போன்.. எந்த மாடல்?
ஹானர் நிறுவனம் சமீபத்தில் ஹானர் 90 ((Honor 90) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த ஹானர் 90 போனுக்கு இப்போது கூட நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஹானர் நிறுவனம் மீண்டும் ஒரு புத்தம் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யஉள்ளது.
அதாவது வரும் அக்டோபர் 18 (நாளை) ஹானர் பிளே 8டி எனும் ஸ்மார்ட்போனை தான் அறிமுகம் செய்ய உள்ளது ஹானர் நிறுவனம். குறிப்பாக நாளை இந்த ஹானர் பிளே 8டி ஸ்மார்ட்போன் சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்படும். அதன்பின்பு தான் மற்ற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது ஆன்னைலின் கசிந்த ஹானர் பிளே 8டி (Honor Play 8T) ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே, டூயல் ரியர் கேமரா அமைப்புகொண்டுள்ளது இந்த ஹானர் பிளே 8டி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஹானர் பிளே 8டி ஸ்மார்ட்போனில் சக்திவாய்ச்த மீடியாடெக் டைமண்சிட்டி 6020 சிப்செட் ( Dimensity 6020 chipset) வசதி உள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் கேமிங் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஹானர் பிளே 8டி ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஹானர் பிளே 8டி ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் அறிமுகமாகும் இந்த ஹானர் பிளே 8டி போன்.
இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஹானர் பிளே 8டி போன். மேலும் மேஜிக் ஒஎஸ் சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஹானர் பிளே 8டி போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
குறிப்பாக ஹானர் பிளே 8டி போனில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஹானர் போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
அதேபோல் 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது இந்த ஹானர் பிளே 8டி ஸ்மார்ட்போன். பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 850 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
ஹானர் பிளே 8டி ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 35 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும் இந்த போன். அதேபோல் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ர்ை-சுநள ஆடியோ ஆதரவு கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர 5ஜி, டூயல் சிம், வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த போன் வெளிவரும். குறிப்பாக இந்த போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








