ஹானர் அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்.. ஆண்ட்ராய்டு 15 OS.. 13எம்பி கேமரா.. எந்த மாடல்?
ஹானர் நிறுவனம் புதிய ஹானர் பிளே 80 ஸ்மார்ட்போனை தற்போது சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போன் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஹானர் பிளே 80 அம்சங்கள் ( Honor Play 80 Specifications): 6.6-இன்ச் எச்டி பிளஸ் டிஎப்டி எல்சிடி டிஸ்பிளே உடன் இந்த ஹானர் பிளே 80 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 16.7 மில்லியன் கலர்ஸ், லோ ப்ளூ லைட் சான்றிதழ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் (MediaTek Dimensity 6300 chipset) உடன் ஹானர் பிளே 80 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட ஜிபியு மற்றும் சிபியு வேகத்தை வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.
8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவு கொண்டுள்ளது இந்த ஹானர் பிளே 80 ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.
மேஜிக்ஓஎஸ் 9.0 (MagicOS 9.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் இந்த ஹானர் பிளே 80 ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
13எம்பி ரியர் கேமரா உடன் ஹானர் பிளே 80 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரர்வும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor) வசதி ஹானர் பிளே 80 ஸ்மார்ட்போனில் உள்ளது. பாட்டம் பயரிங் ஸ்பீக்கர்கள் (Bottom Firing Speakers) இந்த போனில் உள்ளன. ஆகவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தைத் தரும்.
5300எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15W சார்ஜிங் வசதி கொண்டுள்ளது இந்த போன். டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.3, டூயல் சிம் 5ஜி, 3.5மிமீ ஹெட்போன் ஜாக், ஜிபிஎஸ், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஹானர் பிளே 80 ஸ்மார்ட்போனில் உள்ளன. லேக் ப்ளூ, அஸூர் ஸ்கை மற்றும் இன்கி பிளாக் ராக் நிறங்களில் இந்த ஹானர் பிளே 80 ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.
ஹானர் பிளே 80 ஸ்மார்ட்போனின் விலையை இன்னும் ஹானர் நிறுவனம் அறிவிக்கவில்லை. விலை வெளியானதும் உடனே அப்டேட் செய்கிறோம். குறிப்பாக அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும்.


Click it and Unblock the Notifications








