6.08-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஹானர் பிளே 8 ஸ்மார்ட்போன்.!
இந்த ஸ்மார்ட்போன் 2.3ஜிகாஹெர்ட் ஆக்டோ-கோர் செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
ஹானர் நிறுவனம் விரைவில் ஹானர் பிளே 8 ஸ்டார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில வெளிவரும் என்பதால் உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
இதற்கு முன்பு வந்த ஹானர் ஸ்மார்ட்போன்களும் இந்திய சந்தையில் அதிக வரவேற்ப்புகளை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும்.

ஹானர் பிளே 8 ஸ்மார்ட்போனின் மாடல் எண் ஜேஏடி-ஏஎல்00 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:
ஹானர் பிளே 8 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 6.08-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு
720 x 1560 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

13எம்பி ரியர் கேமரா
ஹானர் பிளே 8 மாடல் 13எம்பி ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது,பின்பு 8எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2.3ஜிகாஹெர்ட்ஸ்
இந்த ஸ்மார்ட்போன் 2.3ஜிகாஹெர்ட் ஆக்டோ-கோர் செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சேமிப்பு:
இக்கருவி 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/4ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 2920எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications