Home
Mobile

மார்க்கெட்டே மிரள போகுது.. ரூ.14,357 பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. 50MP கேமரா.. அறிமுகமானது புது Honor போன்..

ஹானர் நிறுவனம் தனது புதிய ஹானர் பிளே 70 பிளஸ் (Honor Play 70 Plus) போனை தற்போது அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 7000எம்ஏஎச் பேட்டரி, ஸ்னாப்டிராகன் சிப்செட், ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

ஹானர் பிளே 70 பிளஸ் அம்சங்கள் (Honor Play 70 Plus Specifications): 6.77-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ஹானர் பிளே 70 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டிசி டிம்மிங் (DC Dimming), ஐ புரொடெக்டன் மோட் உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் உள்ளன.

மார்க்கெட்டே மிரள போகுது.. அறிமுகமானது புது Honor போன்..

அதேபோல் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 சிப்செட் (Snapdragon 6s Gen 3 chipset) உடன் ஹானர் பிளே 70 பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

மேஜிக் ஓஎஸ் 9.0 (Magic OS 9.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஹானர் பிளே 70 பிளஸ் ஸ்மாார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) கொண்டுள்ளது இந்த ஹானர் பிளே 70 பிளஸ் ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த போனில் ஏஐ பட்டன் ஆதரவும் உள்ளது. 400% வால்யூம் கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் புதிய ஹானர் போனில் உள்ளது. இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் ஹானர் பிளே 70 பிளஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் ப்ளூ, பிளாக், பிங்க், ஒயிட் நிறங்களில் புதிய ஹானர் ஸ்மார்ட்போனை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏஐ அம்சங்கள் கொண்ட 50எம்பி ரியர் கேமராவுடன் புதிய ஹானர் பிளே 70 பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அட்டகாசமான படங்களை எடுக்க முடியும். மேலும் IP65 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த புதிய ஹானர் போன் வெளியாகி உள்ளது.

7000mAh பேட்டரி வசதியுடன் ஹானர் பிளே 70 பிளஸ் ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

ஆனால் தற்போது ஹானர் பிளே 70 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஹானர் பிளே 70 பிளஸ் போனின் ஆரம்ப விலை 1,199 Yuan (இந்திய மதிப்பில் ரூ.14,357) ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor Play 70 Plus launched: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X