அடிச்சான் பாரு காப்பி.. Vivo போன் லுக்கில் வெளிவரும் Honor 5ஜி போன்.. 7000mAh பேட்டரி.. எந்த மாடல்?
ஹானர் நிறுவனம் விரைவில் ஹானர் பிளே 70 பிளஸ் (Honor Play 70 Plus) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. தற்போது இந்த புதிய ஹானர் போனின் படங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. அதுவும் ஹானர் பிளே 70 பிளஸ் போன் ஆனது விவோ வி50 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை போலவே உள்ளது.
ஹானர் பிளே 70 பிளஸ் அம்சங்கள் (Honor Play 70 Plus Specifications): 6.77-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ஹானர் பிளே 70 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி ஆகிய இரண்டு வேரியண்ட்களில் ஹானர் பிளே 70 பிளஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஹானர் போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
50எம்பி ரியர் கேமராவுடன் இந்த ஹானர் பிளே 70 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த ஹானர் போனில் உள்ளன.
சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 சிப்செட் (Snapdragon 6s Gen 3 chipset) உடன் ஹானர் பிளே 70 பிளஸ் போன் வெளியாகும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். குறிப்பாக இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
IP65 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் ஹானர் பிளே 70 பிளஸ் போன் வெளியாகும். சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) கொண்டுள்ளது இந்த ஹானர் ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனில் டூயல் ஸ்பீக்கர்கள் உள்ளது. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.
7000mAh பேட்டரி வசதியுடன் ஹானர் பிளே 70 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளாக், ஒயிட், பிங்க், ப்ளூ நிறங்களில் ஹானர் பிளே 70 பிளஸ் போன் வெளியாகும். மேலும் இந்த போனில் வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த ஹானர் பிளே 70 பிளஸ் போன் ஆனது பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
photo credit: Bald Panda, gizmochina


Click it and Unblock the Notifications








