பின்னி எடுக்குது ரேட்.. பட்ஜெட்ல 24GB ரேம்.. 6000mAh பேட்டரி.. TFT டிஸ்பிளே.. 10X ஜூமிங் கேமரா.. எந்த மாடல்?
பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரியர்களிடையே மிகப்பெரும் வரவேற்பு பெறும்படி ஹானர் பிளே 60எம் (Honor Play 60m) போன் களமிறங்கி இருக்கிறது. 24 ஜிபி ரேம், 6000mAh பேட்டரி, 10எக்ஸ் டிஜிட்டல் ஜூமிங் கேமரா போன்ற பீச்சர்களில் பட்டையை கிளப்புகிறது. இந்த ஹானர் பிளே 60எம் போனின் முழு பீச்சர்கள் எப்படி? விலை எவ்வளவு? இதோ விவரங்கள்.
ஹானர் பிளே 60எம் அம்சங்கள் (Honor Play 60m Specifications): இந்த ஹானர் போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு மேஜிக்ஓஎஸ் 9.0 (MagicOS 9.0) கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 எஸ்ஓசி (Octa Core MediaTek Dimensity 6300 SoC) சிப்செட் மற்றும் ஆர்ம் ஜி57 ஜிபியு (ARM G57 GPU) கிராபிக்ஸ் கார்டு சப்போர்ட் கிடைக்கிறது.

இந்த மேஜிக்ஓஎஸ் 9.0 மூலம் ஸ்மார்ட் கேப்சூல் (Smart Capsule) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, ஆப்பிள் போன்களில் கிடைக்கும் டைனாமிக் ஐலேண்ட் பீச்சரை போலவே இதிலும் நோட்டிபிகேஷன்களை பார்த்து கொள்ளலாம். மேலும், பிரைவசி அசிஸ்டன்ட், ஏஐ பேஸ் சேஞ்சிங் டிடெக்சன் போன்ற செக்யூரிட்டி பீச்சர்களை இந்த ஹானர் பிளே 60எம் போன் கொடுக்கிறது.
1010 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.61 இன்ச் (1604 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 16.7 மில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. ஆன்டி-டிராப் (Anti-drop), ஆன்டி-ஃபால் (Anti-fall) மற்றும் ஆன்டி-எக்ஸ்ட்ரூஷன் (Anti-extrusion) ஆகிய சர்டிபிகேஷன் பெற்றுள்ளது.
இதற்கேற்ப IP64 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கிடைக்கிறது. இந்த ஹானர் ப்ளே 60எம் போனில் மூன்று வேரியண்ட்கள் கிடைக்கின்றன. ஆகவே, 12 ஜிபி ரேம் + 12 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் உள்ளது.
இதில் 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் உள்ளது. மேலும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்க இருக்கிறது. ஏஐ எலிமினேட், ஏஐ ஆன்டி-பிராடு, ஏஐ ஒன் கிளிக் போன்ற ஏஐ பீச்சர்களையும் இந்த ஹானர் பிளே 60எம் போன் கொடுக்கிறது. பேக்கப்பில் பட்டையை கிளப்பும்படி 6000mAh பேட்டரி பேக் செய்யப்பட்டுள்ளது.
டூயல் சிம் சிலாட், டைப்-சி சார்ஜிங் மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கிடைக்கிறது. சைடு-ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Fingerprint) கிடைக்கிறது. பிடி 5.3 (BT5.3), ஜிபிஎஸ் (GPS) போன்ற கனெக்டிவிட்டி பீச்சர்கள் உள்ளன. ஹானர் சவுண்ட் (HONOR Sound) சப்போர்ட் உள்ளது. இப்போது, இந்த போனின் விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்த ஹானர் பிளே 60எம் போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.19,882ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.25,734ஆகவும் இருக்கிறது. அதேபோல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.30,415ஆகவும் இருக்கிறது.
இந்த விலை விவரங்கள் சீனாவின் யுவான் அடிப்படையில் இந்திய ரூபாய்க்கு மாற்றப்பட்டவையாகும். ஆகவே, மாறுபாடுகள் இருக்கும். இந்தியாவில் இந்த இதைவிட மலிவாக வெளியாக வாய்ப்புள்ளது. இப்போதைக்கு சீனாவில் மட்டுமே கிடைக்கிறது. மார்னிங் க்ளோவ் கோல்டு (Morning Glow Gold), ஜேட் டிராகன் ஸ்னோவ் (Jade Dragon Snow), இன்ங் ராக் பிளாக் (Ink Rock Black) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications