Home
Mobile

மிரளுது பட்ஜெட்.. வெறும் ரூ.14,019 போதும்.. 6000mAh பேட்டரி.. IP64 ரேட்டிங்.. 120Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?

நம்ப முடியாத அடிமட்ட பட்ஜெட்டில் 6000mAh பேட்டரி மட்டுமல்லாமல், ஃபைவ்-ஸ்டார் ஆன்டி-ஃபால் ரெசிஸ்டன்ஸ், IP64 டஸ்ட்/வாட்டர் ரெசிஸ்டன்ட், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே, 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் போன்ற பீச்சர்களுடன் ஹானர் பிளே 60 (Honor Play 60) போன் வெளியாகி இருக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் ஏஐ கேமரா பீச்சர்களை கொடுக்கிறது. இந்த புதிய ஹானர் மாடலின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஹானர் பிளே 60 அம்சங்கள் (Honor Play 60 Specifications): இந்த ஹானர் போனில் 6.61 இன்ச் (1604 x 720 பிக்சல்கள்) டிஎப்டி எல்சிடி (TFT LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 16.7 மில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. மேலும், டிசி ஃபிளிக்கர்-ப்ரீ டிம்மிங் (DC Flicker-free Dimming) சப்போர்ட் கிடைக்கிறது.

மிரளுது பட்ஜெட்.. வெறும் ரூ.14,019 போதும்.. 6000mAh பேட்டரி மாடல்!

மேலும், நேச்சுரல் லைட் ஐ புரொடெக்சன் (Natural Light Eye Protection) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, அடிமட்ட பட்ஜெட்டிலும் பக்காவான டிஸ்பிளேவை பெறலாம். இந்த ஹானர் பிளே 60 போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 எஸ்ஓசி (Octa Core MediaTek Dimensity 6300 SoC) சிப்செட் மற்றும் மேஜிக் ஓஎஸ் 9.0 (MagicOS 9.0) கிடைக்கிறது.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஆர்ம் ஜி57 எம்சி2 ஜிபியு (ARM G57 MC2 GPU) சப்போர்ட் கிடைக்கிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் கிடைக்க இருக்கிறது. மேலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட் கிடைக்க இருக்கிறது.

இந்த ஹானர் பிளே 60 போனில் 13 எம்பி சிங்கிள் ரியர் கேமரா சிஸ்டம் (Single Rear Camera System) கிடைக்கிறது. இந்த கேமராவில் 1080P வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 10X டிஜிட்டல் ஜூமிங் சப்போர்ட் கிடைக்கிறது. அதேபோல 5 எம்பி செல்பீ ஷூட்டரிலும் 1080P வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. இந்த கேமராவில் ஏஐ எலிமினேட் (AI Eliminate) கிடைக்கிறது.

இதன் மூலம் போட்டோக்களில் தேவையில்லாத ஆப்ஜெக்ட்களை நீக்கி கொள்ளலாம். மேலும், இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியாத கேமரா பீச்சர்களும் இந்த போனில் இருக்கிறது. ஆகவே, டைம்-லேப்ஸ் போட்டோகிராபி (Time-lapse Photography), நைட் சீன் மோட் (Night Scene Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) கிடைக்கிறது.

வீடியோ பீச்சர்களில் டூயல் வியூ வீடியோ (Dual-view Video), மைக்ரோ மூவி மோட் (Micro-movie Mode) கிடைக்கிறது. அதேபோல இந்த பட்ஜெட்டிலும் 6000mAh பேட்டரி மற்றும் இன்டலிஜென்ட் சார்ஜிங் மோட் (Intelligent Charging Mode) கொடுக்கிறது. ஃபாஸ்ட் சார்ஜிங் பற்றிய விவரங்கள் இதில் இல்லை. IP64 ரேட்டிங் டஸ்ட்/வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.

மேலும், ஃபைவ்-ஸ்டார் ஆன்டி-ஃபால் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. ஆகவே, குவாலிட்டியில் பக்காவாக இருக்கும். சியாவோஷன் கிரீன் (Xiaoshan Green), யூலாங் ஸ்னோவ் (Yulong Snow), மோயான் பிளாக் (Moyan Black) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.14,037ஆக இருக்கிறது.

அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.16,375ஆக இருக்கிறது. இந்த விலை சீனாவின் யுவானின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் ஹானர் மாடல்கள் ஏற்கனவே கிடைக்க தொடங்கிவிட்டன. இந்த மாடல்களும் அதேபோல வெளியாக வாய்ப்புள்ளது.

Best Mobiles in India

English summary
Honor Play 60 With 13MP Camera 12GB RAM 6000mAh Battery Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X