மார்க்கெட்டே அதிர போகுது.. 6000mAh பேட்டரி.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Honor போன்.. எந்த மாடல்?
ஹானர் (Honor) நிறுவனம் ஹானர் பிளே 60 (Honor Play 60) எனும் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதுவும் இந்த போன் சீனாவில் தான் முதலில் அறிமுகம் செய்யப்படும். அதன்பின்பு தான் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் இந்த ஹானர் பிளே 60 போன் அறிமுகமாகும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
ஹானர் பிளே 60 அம்சங்கள் (Honor Play 60 specifications): 6.7-இன்ச் எல்சிடி எச்டி பிளஸ் டிஸ்பிளே (LCD HD+ display) வசதியுடன் ஹானர் பிளே 60 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1604 x 720 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட்(MediaTek Dimensity 6300 chipset) உடன் ஹானர் பிளே 60 ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். குறிப்பாக மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் இந்த டைமன்சிட்டி சிப்செட்.
13எம்பி ரியர் கேமரா உடன் ஹானர் பிளே 60 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் ஹானர் பிளே 60 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஹானர் போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் மேஜிக்ஓஎஸ் 9.0 (MagicOS 9.0)மூலம் ஹானர் பிளே 60 இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதியும் இந்த போனில் உள்ளது.
6000mAh பேட்டரி வசதியுடன் ஹானர் பிளே 60 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ஹானர் பிளே 60 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.
கிரீன் (Green), பிளாக் (Black) நிறங்களில் இந்த ஹானர் போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ஹானர் பிளே 60 போன் ஆனது $235 (இந்திய மதிப்பில் ரூ.20,088) விலையில் அறிமுகமாகும். அதேபோல் இந்த ஆண்டு பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது ஹானர் நிறுவனம்.


Click it and Unblock the Notifications








