Home
Mobile

வேற சாய்ஸே வேணாம்.. 6000mAh பேட்டரி.. 256GB மெமரி.. வருகிறது புது ஹானர் போன்.. எந்த மாடல்?

இந்தியாவில் ஹானர் நிறுவனம் சமீபத்தில் ஹானர் 90 (Honor 90) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த போனுக்கு இப்போதும் கூட இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஹானர் நிறுவனம் மீண்டும் ஒரு அசத்தலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இது குறித்து தகவலை இப்போது பார்ப்போம்.

அதாவது ஹானர் நிறுவனம் நாளை (அக்.10) ஹானர் பிளே 50 பிளஸ் (Honor Play 50 Plus) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய போன் முதலில் சீனாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதன்பின்பு இந்தியா மற்றும் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6000mAh பேட்டரி.. 256GB மெமரி.. வருகிறது புது ஹானர் போன்.. எந்த மாடல்?

அதேபோல் ஆன்லைனில் கசிந்த ஹானர் பிளே 50 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 5ஜி ஆதரவுடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

குறிப்பாக 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது இந்த ஹானர் பிளே 50 பிளஸ் ஸ்மார்ட்போன். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு டூயல் ஸ்பீக்கர்கள், 50எம்பி கேமரா உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் ஹானர் பிளே 50 பிளஸ் போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஹானர் 90 போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

ஹானர் 90 போன் 6.7 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ஓஎல்இடி (OLED) குவாட் கர்வ்ட் (Quad Curved) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் டிசிஐ-பி3 (DCI-P3) கலர் காமட் மற்றும் 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. அதோடு 360Hz டச் சாம்பிளிங் ரேட், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3840Hz பிடபுள்யூஎம் டிம்மிங் ஃபிரிகொன்சி (PWM Dimming Frequency) வருகிறது.

இந்த ஹானர் 90 போன் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி ஆகிய 2 மாடல்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த 8 ஜிபி மாடலில் 5 ஜிபி விர்ச்சுவல் ரேம் வருகிறது. அதோபோல 12 ஜிபி ரேம் மாடலில் 7 ஜிபி மெமரி வருகிறது. 66W சூப்பர்சார்ஜ் (SuperCharge) கொண்ட 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். அதேசமயம் இந்த போனை விரைவில் சார்ஜ் செய்துவிட முடியும்.

ஹானர் 90 போனில் 200 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2 எம்பி (மேக்ரோ ஆப்சன்) டெப்த் லென்ஸ் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. மேலும் இதில் 50 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராக்களில் 4K வீடியோ ரெக்கார்ட்டிங் சப்போர்ட் வருகிறது.

6000mAh பேட்டரி.. 256GB மெமரி.. வருகிறது புது ஹானர் போன்.. எந்த மாடல்?

ஹானர் 90 போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13) உடன் 2.5GHz குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 4என்எம் (2.5GHz Qualcomm Snapdragon 7 Gen 1 4nm) சிப்செட் வருகிறது. கேமிங் பிரியர்களுக்காக அட்டகாசமான அட்ரினோ 644 ஜிபியு (Adreno 644 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல ஹானர் மாடல்களில் வரும் மேஜிக்ஓஎஸ் 7.1 (MagicOS 7.1) வருகிறது.

மிட்நைட் பிளாக் (Midnight Black), டயமண்ட் சில்வர் (Diamond Silver) மற்றும் எம்ரால்டு கிரீன் (Emerald Green) ஆகிய 3 கலர்களில் இந்த போன் விற்பனைக்கு வந்துள்ளது. அதேபோல் விரைவில் அறிமுகமாகும் ஹானர் பிளே 50 பிளஸ் ஸ்மார்ட்போன் கூட தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor Play 50 Plus with 6000mAh battery will be launched on October 10 : check specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X