Home
Mobile

வாரி தூக்கும் பட்ஜெட்.. 6.8-இன்ச் டிஸ்பிளே.. 6000mAh பேட்டரி.. அறிமுகமானது புது ஹானர் போன்.. எந்த மாடல்?

ஹானர் நிறுவனம் இன்று புதிய ஹானர் பிளே 50 பிளஸ்(Honor Play 50 Plus) ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. அதேபோல் விரைவில் இந்தியா மற்றும் அனைத்து நாடுகளிலும் ஹானர் பிளே 50 பிளஸ் போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹானர் பிளே 50 பிளஸ் (Honor Play 50 Plus) ஸ்மார்ட்போன் ஆனது 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் (Full HD+) ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), 850 நிட்ஸ் ப்ரைட்னஸ், 20:09 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த அட்டகாசமான ஹானர் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாரி தூக்கும் பட்ஜெட்.. அறிமுகமானது புது ஹானர் போன்.. எந்த மாடல்?

குறிப்பாக பெரிய டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இந்த போனில் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

சக்திவாய்ந்த டைமன்சிட்டி 6020 சிப்செட் ( Dimensity 6020 chipset) வசதியுடன் இந்த ஹானர் பிளே 50 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் கொடுக்கும். அதேசமயம் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி இந்த போனில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

Magic OS 7.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஹானர் பிளே 50 பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

ஹானர் பிளே 50 பிளஸ் ஸ்மார்ட்போனில் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயர் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 6000எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த ஹானர் பிளே 50 பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேசமயம் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு ஹானர் பிளே 50 பிளஸ் போனின் எடை 199 கிராம் ஆகும்.

வாரி தூக்கும் பட்ஜெட்.. அறிமுகமானது புது ஹானர் போன்.. எந்த மாடல்?

இந்த ஹானர் பிளே 50 பிளஸ் போனுக்கு சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-Mounted Fingerprint Sensor) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் Hi-Res ஆடியோ ஆதரவு கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர 5ஜி, டூயல் சிம், 5ஜி, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

ஹானர் பிளே 50 பிளஸ் ஸ்மார்ட்போன் மேஜிக் நைட் பிளாக், மோ யூகிங் (பச்சை), ஸ்டார் பர்பிள் மற்றும் ஸ்ட்ரீமிங் சில்வர் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போனின் விலை 1,399 Yuan (இந்திய மதிப்பில் ரூ.16,300) ஆக உள்ளது. குறிப்பாக இந்த போனுக்கு அதிக வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor Play 50 Plus with 6000mAh battery launched: check price, specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X