இதோ இந்த மே-18 வருகிறது: ஹானர் ப்ளே 5 தொடர் குறித்து வெளியான தகவல்!

|

ஹானர் நிறுவனம் புதிய ப்ளே 5 தொடர் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இந்த வெளியீடு எப்போது நடைபெறும் என்பதை நிறுவனம் தெரிவித்திருக்கிறது. நிறுவனம் மே-18 அன்று பின்புறத்தில் நான்கு கேமராக்கள் கொண்ட ஒரு தொலைபேசி வரும் என குறிப்பிட்டுள்ளது. அதேபோல் இது ஓஎல்இடி திரையுடன் வரும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

ஹானர் ப்ளே 5 ஸ்மார்ட்போன்

ஹானர் ப்ளே 5 ஸ்மார்ட்போன்

வெய்போவில் வெளியிட்ட தகவலின்படி ஹானர் ப்ளே 5 ஸ்மார்ட்போன் குறித்த தகவலின்படி, இது பின்னால் ஒப்பிடமுடியாத கேமரா அமைப்பை கொண்டிருக்கிறது. இருப்பினும் ஒரே வரிசையில் ஒரு பகுதியாக இருக்கும் கேமராக்கள் கொண்ட இரண்டு ஸ்மார்ட்போன்கள் காண்பிக்கப்படுகிறது. இது ஹானர் ப்ளே 5, ஹானர் ப்ளே 5 ப்ரோ உள்ளிட்ட சாதனங்களில் ஏதாவதாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

64 மெகாபிக்சல் குவாட்- கேமரா அமைப்பு

64 மெகாபிக்சல் குவாட்- கேமரா அமைப்பு

இரண்டு ஸ்மார்ட்போன்களும் 64 மெகாபிக்சல் குவாட்- கேமரா அமைப்பு பின்புறத்தில் இருக்கிறது. வேறு அம்சங்கள் தகவல்களாக வெளியாகி உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் முழு எச்டி ப்ளஸ் தெளிவுத்திறன் கொண்ட 6.53 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளே மற்றும் 800 யூ சிப்செட் உடன் வரும் எனவும் இதன் எடை 179 கிராம் ஆக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

3800 எம்ஏஎச் பேட்டரி திறன்

3800 எம்ஏஎச் பேட்டரி திறன்

மேலும் இந்த ஸ்மார்ட்போனானது 3800 எம்ஏஎச் பேட்டரி திறன் உடன் வரும் எனவும் சூப்பர் சார்ஜ் தரநிலையை பெற்றிருக்கிறதா அல்லது சொந்த தொழில்நுட்பத்தை உருவாக்க முயற்சிக்கிறதா என்பது குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் 64 எம்பி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் கேமரா, இரட்டை 2 எம்பி கேமராக்களுடன் வரும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 66 வாட்ஸ் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சமீபத்தில் வெளியான ஹானர் டேப் எக்ஸ்7

சமீபத்தில் வெளியான ஹானர் டேப் எக்ஸ்7

ஹானர் டேப் எக்ஸ்7 சாதனம் சீனாவில் கடந்த வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. இரண்டு புறத்திலும் மெல்லிய பெசல்கள் உள்ளது. மேலும் கீழ் பகுதியில் தடிமனான பெசல் மற்றும் தடிமனான நெற்றிப்பகுதி உள்ளது. ஹானர் டேப் எக்ஸ்7 ஒரே வேரியண்ட் மற்றும் ஒரே வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. எல்டிஇ வெர்சன் அம்சத்தோடு டேப்லெட் வருகிறது.

ஹானர் டேப் எக்ஸ்7 விலை

ஹானர் டேப் எக்ஸ்7 விலை

ஹானர் டேப் எக்ஸ்7 சாதனமானது ஆக்டோ கோர் மீடியாடெக் எஸ்ஓசி உடன் இயக்கப்படுகிறது. மேலும் இந்த சாதனம் 8 இன்ச் எச்டி டிஸ்ப்ளே அம்சத்தோடு வருகிறது. இதில் மிகப்பெரிய பேட்டரி மற்றும் 10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. ஹானர் டேப் எக்ஸ் 7 விலை குறித்து பார்க்கையில், ஹானர் டேப் எக்ஸ் 7 விலையானது இந்திய மதிப்புப்படி ரூ.10,300 ஆக இருக்கிறது. இது வைஃபை வேரியண்ட் ஆதரவோடு 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு அம்சத்துடன் வருகிறது. அதேபோல் இதன் எல்டிஇ வேரியண்ட் இந்திய மதிப்புப்படி ரூ.13,700 ஆக இருக்கிறது.

ஒற்றை டார்க் ப்ளூ வண்ண விருப்பம்

ஒற்றை டார்க் ப்ளூ வண்ண விருப்பம்

ஹானர் டேப் எக்ஸ் 7 சாதனமானது ஒற்றை டார்க் ப்ளூ வண்ண விருப்பத்தில் வருகிறது. வைஃபை வேரியண்ட் அம்சத்தோடு சீனாவில் ஹை ஹானர் ஸ்டோர்களில் வாங்கலாம். மேலும் நிறுவனம் ஹானர் டேப் எக்ஸ்7 சர்வதேச சந்தையில் கிடைக்கும் விவரங்கள் குறித்து நிறுவனம் குறிப்பிடவில்லை.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Honor Play 5 Series May Launching on May 18 with these Specification

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X