Home
Mobile

இவ்ளோ தானா? அப்போ 2 போன் வாங்கலாமே.. மலிவு விலையில் 5ஜி போன்.. 5200mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஹானர் நிறுவனத்தின் ஹானர் பிளே 40 எஸ் (HONOR Play 40S) போன் வெறும் ரூ.11,000 பட்ஜெட்டில் எச்டி டிஸ்பிளே, 5,200mAh பேட்டரி, அட்ரினோ கிராபிக்ஸ் கார்டு, ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் சிப்செட் போன்ற பட்டையை கிளப்பும் அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நீண்ட ஆண்டுகளுக்கு பின் ஹானர் நிறுவனம் மீண்டும் போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதனால், மலிவு விலை போன்கள் தயாரிப்பில் மும்முரம் காட்டி வருகிறது. ஏனென்றால், சமீப காலமாக மலிவு மற்றும் பட்ஜெட் விலை போன்களுக்கு இந்தியாவில் மிகப்பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

மலிவு விலையில் 5ஜி போன்.. 5200mAh பேட்டரி.. எந்த மாடல்?

ரியல்மி, ரெட்மி, ஐடெல், போக்கோ, இன்பினிக்ஸ் போன்ற நிறுவனங்கள் வெறும் ரூ.10,000 பட்ஜெட்டில் 5ஜி சிப்செட், 108 எம்பி கேமரா, 6000mAh பேட்டரி போன்ற பிரம்மாண்ட அம்சங்களை கொடுத்து மக்களின் மனநிலையை மாற்றிவிட்டன. இதற்கு ஹானர் நிறுவனமும் விதிவிலக்கல்ல. அந்த நிறுவனமும் மலிவு விலை போன்களை அறிமுகம் செய்ய தொடங்கிவிட்டது.

இன்னும், இந்தியாவில் கால் பதிக்கவில்லை என்றாலும், மலிவு விலை போன்களை சீனாவில் களமிறக்கி விற்பனை விவரங்கள் மற்றும் வரவேற்பை கவனித்து வருகிறது. அந்த வரிசையில் பக்காவான அம்சங்களுடன் மலிவு விலையில் ஹானர் பிளே 40 எஸ் போன் களமிறக்கப்பட்டுள்ளது. இந்த போனின் முழு அம்சங்கள், விலை விவரங்கள் பின்வருமாறு.

ஹானர் பிளே 40 எஸ் (HONOR Play 40S Specifications): இந்த ஹானர் போன் 6.56 இன்ச் (720 x 1612 பிக்சல்கள்) எச்டி பிளஸ் டிஃஎப்டி எல்சிடி (TFT LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13) மற்றும் மேஜிக் ஓஎஸ் 7.1 (Magic OS 7.1) கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் எஸ்ஓசி (Qualcomm Snapdragon 480 Plus SoC) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இந்த ஹானர் போனின் மெயின் கேமரா எல்இடி பிளாஷ் லைட்டுடன் வருகிறது. ஆகவே, 13 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது. இதில், 4 விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த ஹானர் பிளே 40 எஸ் போன் 10W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5,200mAh பேட்டரி கொண்டுள்ளது. மேலும், டூயல் நானோ சிம் (Dual Nano SIM), வை - பை 802 (Wi - fi), ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), 3.5 மிமீ ஆடியோ ஜாக், டைப் - சி (Type - C) சார்ஜிங் போர்ட், ஜிபிஎஸ் (GPS) உள்ளிட்ட அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த போன் மிட்நைட் பிளாக் (Midnight Black) மற்றும் கிரீன் (Green) ஆகிய இரண்டு கலரில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ. 11,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்போது, சீனாவில் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது.

வரும் வாரங்களில் மற்ற நாடுகளில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் ஹானர் நிறுவனம், இந்தியாவில் மீண்டும் விற்பனையை தொடங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்போது, இதுபோன்ற மலிவு விலை போன்களும் இடம்பெறும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor Play 40S With 13MP Camera, 4GB RAM, 5200mAh Battery, Snapdragon 480 Plus Specifications, Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X