"ஸ்மார்ட்" போன் அது இதுதான்: கவர்ச்சிகரமான அம்சங்கள்., ஹானர் ப்ளே 4, ப்ளே 4 ப்ரோ

|

ஹானர் நிறுவனம் தங்களது புதிய மாடல் ஸ்மார்ட்போனான ஹானர் ப்ளே 4 மற்றும் ப்ளே 4 ப்ரோ ஆகிய இரண்டு மாடல் ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஹானர் ப்ளே 4 மற்றும் ஹானர் 4 ப்ளே ப்ரோ

ஹானர் ப்ளே 4 மற்றும் ஹானர் 4 ப்ளே ப்ரோ

ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் பிராண்ட் புதிய மாடலான ஹானர் ப்ளே 4 மற்றும் ஹானர் 4 ப்ரோ ஆகிய மொபைல் அறிமுகம் சீனாவில் அறிவித்துள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் 5 ஜி ஆதரவோடு அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

ஹானர் ப்ளே 4 விலை

ஹானர் ப்ளே 4 விலை

இதில் இன்ப்ரா ரெட் டெம்பரேச்சர் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இது 20 டிகிரி செல்சியஸ் முதல் 100 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையை அளவிடுகிறது. ஹானர் ப்ளே 4, விலை குறித்து பார்க்கையில் இதன் 6 ஜிபி ரேம் 128 ஜிபி ஸ்டோரேஜ் வசதியானது 1799 யுவான் அதாவது ரூ. 19,090 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 128 ஜிபி ஸ்டோரேஜ் பதிப்பைக் கொண்ட 8 ஜிபி ரேம் 1999 யுவான் அதாவது ரூ. 21,210 ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது.

BSNL புதிய திட்டம்: தினசரி 2 ஜிபி டேட்டா., வரம்பற்ற குரல் அழைப்பு- விலை தெரியுமா?BSNL புதிய திட்டம்: தினசரி 2 ஜிபி டேட்டா., வரம்பற்ற குரல் அழைப்பு- விலை தெரியுமா?

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி

ஹானர் ப்ளே 4 ப்ரோ 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி வழங்கும் இந்த மாடலானது 2899 யுவான் அதாவது ரூ. 30,760 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது இதில் இன்ப்ரா ரெட் டெம்பரேச்சர் வசதி பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் போனானது 2999 யுவான் அதாவது ரூ. 31,830 ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பேண்டஸி நைட் உள்ளிட்ட மூன்று வண்ணங்களில் வருகிறது.

6 ஜிபி / 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

6 ஜிபி / 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

ஹானர் ப்ளே 4., 6.81 அங்குல முழு எச்டி + எல்சிடி டிஸ்ப்ளே, 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானத்தோடு 20: 9 விகிதத்துடன் கிடைக்கும். இது 2.0GHz ஆக்டா-கோர் மீடியாடெக் வசதியோடு வருகிறது. இது 6 ஜிபி / 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியோடு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

64 மெகாபிக்சல் பிரதான பின்புற கேமரா

64 மெகாபிக்சல் பிரதான பின்புற கேமரா

ஸ்மார்ட்போன் குவாட் ரியர் கேமரா அமைப்பு 64 மெகாபிக்சல் பிரதான பின்புற கேமரா அமைப்போடு வெளியாக உள்ளது. அதோடு 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் ஆழ கேமரா வசதிகளோடு எல்இடி பிளாஷ் அம்சமும் உள்ளது. மேலும் இதன் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமராவும் உள்ளது.

ஹானர் ப்ளே 4 ஆண்ட்ராய்டு 10

ஹானர் ப்ளே 4 ஆண்ட்ராய்டு 10

ஹானர் ப்ளே 4 ஆண்ட்ராய்டு 10 EMIUI 10.1 உடன் இயங்குகிறது. இது 4300 எம்ஏஎச் பேட்டரியோடு, 22.5 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இந்த மொபைலின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வசதி உள்ளது.

ஹானர் ப்ளே 4 ப்ரோ

ஹானர் ப்ளே 4 ப்ரோ

ஹானர் ப்ளே 4 ப்ரோ 6.57 இன்ச் முழு எச்டி + டிஸ்ப்ளே, 1080 x 2400 பிக்சல்கள் திரை தெளிவுத்திறன் அம்சத்தோடு கிடைக்கிறது. மேலும் 8 ஜிபி மற்றும் 128 ஜிபி உள் சேமிப்பு வசதியோடு கிடைக்கிறது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வசதி உள்ளது.

இரட்டை-கேமரா அமைப்பு

இரட்டை-கேமரா அமைப்பு

ஹானர் ப்ளே 4 ப்ரோ இரட்டை-கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் சோனி ஐஎம்எக்ஸ் 600 ஆர்ஒய்பி சென்சார் உடன் 40 மெகாபிக்சல் பிரதான கேமரா வசதி உள்ளது. 32 மெகாபிக்சல் மற்றும் 8 மெகாபிக்சல் 105 ° அல்ட்ரா-வைட் கேமராவோடு இரட்டை செல்பி சென்சார் கேமரா வசதி இதில் உள்ளது.

சுந்தர் பிச்சை வெளிவேஷம் போடாதீர்கள் - கொந்தளிக்கும் இந்தியர்கள்! நெருப்பாய் பாயும் கேள்விகள் ஏன்?சுந்தர் பிச்சை வெளிவேஷம் போடாதீர்கள் - கொந்தளிக்கும் இந்தியர்கள்! நெருப்பாய் பாயும் கேள்விகள் ஏன்?

4200mAh பேட்டரி

4200mAh பேட்டரி

இது Android 10 OS உடன் EMIUI 10.1 மூலம் இயக்கப்படுகிறது. இந்த சாதனம் 40w சார்ஜிங் கொண்ட 4200mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இதன் இணைப்பு அம்சங்கள் இரட்டை 5 ஜி, புளூடூத் 5 உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களோடு கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Honor play 4 and play 4 pro announced the launch with 5G and Infrared Temperature sensor

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X