5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
ஹனார் நிறுவனம் இன்று சீனாவில் தனது அதிநவீன ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஹனார் பிளே 3இ டிஸ்பிளே
ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்போன் பொதுவாக 5.71-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1520 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்தஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

சேமிப்பு வசதி:
இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/648ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாகமெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா அமைப்பு
ஹனார் பிளே 3இ சாதனத்தின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 5எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

அருமையான சிப்செட் வசதி
ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் போன்ற சிறப்பான அம்சங்கள் இதில் உள்ளது.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்
ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்போனில் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் என பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளன. மேலும் 3020 எம்ஏஎச் பேட்டரி வசதி கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.
அட்டகாசமான விலை
இந்திய மதிப்பில்...
2ஜிபி ரேம் கொண்ட சியோமி மி9 லைட் ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,077-ஆக உள்ளது.
3ஜிபி ரேம் கொண்ட சியோமி மி9 லைட் ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,100-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications