ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் சிப்செட் உடன் ஹானர் பிளே 30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
ஹானர் நிறுவனம் புதிய ஹானர் பிளே 30 ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது ஹானர் பிளே 30 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஹானர் பிளே 30 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 720×1600 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹானர் பிளே 30 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் சிப்செட் வசதி உள்ளது. மேலும் Magic UI 5.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஹானர் பிளே 30 ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

ஹானர் பிளே 30 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான வீடியோமற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும்.

ஹானர் பிளே 30 ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுஇந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஹானர் பிளே 30 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன். கருப்பு, நீலம், வெள்ளை, தங்க நிறங்களில் இந்த புதிய ஹானர் பிளே 30 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டூயல்-சிம், 4ஜி, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி5.1, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஹானர் பிளே 30 ஸ்மார்ட்போன் மாடல். மேலும் ஹானர் பிளே 30 ஸ்மார்ட்போனின் விலைப் பற்றிய தகவலை வெளியிடவில்லை அந்நிறுவனம்.


Click it and Unblock the Notifications