6.5-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் ஹானர் பிளே 20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
ஹானர் நிறுவனம் தனது புதிய ஹானர் பிளே 20 ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ஹானர் பிளே 20 ஸ்மார்ட்போனின் முழு விவரங்களையும் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஹானர் பிளே 20 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.5-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1600 x 720 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.
ஹானர் பிளே 20 ஸ்மார்ட்போன் மாடலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 12bn UniSoC Tiger T610 பிராசஸர் உடன் மாலி ஜி52 ஜிபியு ஆதரவும் இடம்பெற்றுள்ளது. எனவே இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்றே கூறலாம். மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

ஹானர் பிளே 20 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோ கால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம். இது தவிர பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளன இந்த ஸ்மார்ட்போனின் பின்புற கேமராக்கள்.
இந்த புதிய ஸ்மார்ட்போனில் 6ஜிபி/ 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளன. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவரும் இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.
ஹானர் பிளே 20 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் வசதி என பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

4ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ், என்எப்சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஹானர் பிளே 20 ஸ்மார்ட்போன் மாடல். மேஜிக் நைட் பிளாக், Iceland White, அரோரா ப்ளூ மற்றும் டைட்டானியம் சில்வர் போன்ற நிறங்களில் இந்த புதிய ஹானர் பிளே 20 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
