Home
Mobile

புதிய ஹானர் பிளே 10டி போன் அறிமுகம்.. 7000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. 45W சார்ஜிங்.. என்ன விலை?

ஹானர் நிறுவனம் தனது புதிய ஹானர் பிளே 10டி (Honor Play 10T) ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த புதிய ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதுவும் 7000எம்ஏஎச் பேட்டரி, ஸ்னாப்டிராகன் சிப்செட், ஃபாஸ்ட் சார்ஜிங் உளளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

ஹானர் பிளே 10டி அம்சங்கள் (Honor Play 10T Specifications): 6.77-இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே வசதியுடன் ஹானர் பிளே 10டி போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2412×1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 700 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. பின்பு இந்த டிஸ்பிளேவில் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

புதிய ஹானர் பிளே 10டி அறிமுகம்.. 7000mAh பேட்டரி.. என்ன விலை?

குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 சிப் (Qualcomm's Snapdragon 6s Gen 3 chip) உடன் ஹானர் பிளே 10டி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் ஹானர் பிளே 10டி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

50எம்பி ரியர் கேமரா உடன் ஹானர் பிளே 10டி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

IP65 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance)ஆதரவுடன் இந்த புதிய ஹானர் பிளே 10டி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) ஆதரவும் இந்த புதிய ஹானர் ஸ்மார்ட்போனில் உள்ளது.

7000எம்ஏஎச் பேட்டரி உடன் ஹானர் பிளே 10டி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த போனின் பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

டூயல் ஸ்பீக்கர்கள் இந்த ஹானர் பிளே 10டி ஸ்மார்ட்போனில் உள்ளன. பின்பு வைஃபை 5, புளூடூத் 5.1, என்எப்சி, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போனின் எடை 207 கிராம் ஆகும்.கருப்பு, வெள்ளை மற்றும் நீல நிறங்களில் இந்த புதிய ஹானர் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி வசதி இந்த புதிய போனில் உள்ளது. அதேபோல் ஹானர் பிளே 10டி ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 999 yuan (இந்திய மதிப்பில் ரூ.12,344) ஆக உள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ஹானர் பிளே 10டி வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும்.

Best Mobiles in India

English summary
Honor Play 10T launched with 7000mAh battery: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X