அறிமுகமானது புது Honor போன்.. கம்மி விலை.. 5300mAh பேட்டரி.. ஆண்ட்ராய்டு 15 OS.. எந்த மாடல்?
ஹானர் நிறுவனம் ஹானர் பிளே 10ஏ (Honor Play 10A) எனும் ஸ்மார்ட்போன் அறிமுகம் சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஹானர் பிளே 10ஏ அம்சங்கள் (Honor Play 10A Specifications): 6.7-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த ஹானர் பிளே 10ஏ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6300 எஸ்ஒசி (MediaTek Dimensity 6300 SoC) சிப்செட் உடன் இந்த புதிய ஹானர் பிளே 10ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி உடன் ஹானர் பிளே 10ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ் கார்டு ஸ்லாட் ஆதரவும் இந்த போனில் உள்ளது.
மேஜிக்ஓஎஸ் 9 (MagicOS 9) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய ஹானர் பிளே 10ஏ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
13எம்பி ரியர் கேமரா உடன் ஹானர் பிளே 10ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
5300mAh பேட்டரி உடன் ஹானர் பிளே 10ஏ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15W வயர்டு சார்ஜிங் ஆதரவும் இந்த போனில் உள்ளது.
ஃபேஸ் அன்லாக், டூயல் நானோ சிம் உள்ளிட்ட பல வசதிகள் இந்த புதிய ஹானர் ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் லேக் ப்ளூ, ப்ளூ ஸ்கை மற்றும் இங்க் ராக் பிளாக் நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
ஹானர் பிளே 10ஏ ஸ்மார்ட்போனின் விலை 799 Yuan (இந்திய மதிப்பில் ரூ.10,203)-ஆக உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
photo credits: Honor


Click it and Unblock the Notifications








