அறிமுகமானது புது Honor போன்.. IP52 ரேட்டிங்.. 5000mAh பேட்டரி.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
ஹானர் பிளே 10 (Honor Play 10) ஸ்மார்ட்போன் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த போனின் விலை மற்றும் விற்பனை விவரங்களை வெளியிடவில்லை ஹானர் நிறுவனம். கூடிய விரைவில் இந்த போன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த புதிய ஹானர் பிளே 10 ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஹானர் பிளே 10 அம்சங்கள் (Honor Play 10 Specifications): 6.74-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது புதிய ஹானர் பிளே 10 ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 720 × 1600 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. இதில் பெரிய டிஸ்பிளே உள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் மீடியாடெக் ஹீலியோ ஜி81 சிப்செட் (MediaTek Helio G81 chipset) உடன் ஹானர் பிளே 10 போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு ஆண்ட்ராய்டு கோ எடிஷன் (Android Go Edition) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
3ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ஹானர் பிளே 10 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
13எம்பி ரியர் கேமராவுடன் ஹானர் பிளே 10 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மூலம் 1080 பிக்சல்ஸ் வீடியோ பதிவு செய்ய முடியும்.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) கொண்டுள்ளது ஹானர் பிளே 10 ஸ்மார்ட்போன். மேலும் IP52 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust and splash resistant) ஆதரவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.
5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஹானர் பிளே 10 ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் இந்த ஹானர் பிளே 10 ஸ்மார்ட்போனின் எடை 189 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.
புளூடூத் 5.1, வைஃபை 5, 3.5எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் ஹானர் பிளே 10 போனில் உள்ளன. பின்பு மிட்நைட் பிளாக், ஸ்டாரி பர்பிள் மற்றும் ஓஷன் சியான் நிறங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஹானர் பிளே 10 போன் மலிவு விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications