ஹானர் 8 ப்ரோ மற்றும் 6எக்ஸ் கருவிகளுக்கு இலவச சலுகைகள் அறிவிப்பு.!

|

இந்த ஹானர் சலுகைகளின் கீழ், நுகர்வோர்கள் ஹெட்போன், யூஎஸ்பி டைப்-சி கேபிள், மைக்ரோ யுஎஸ்பி டூ டைப் சி கன்வெர்ட்டர் மற்றும் ரூ.2,000/- மதிப்புள்ள செல்பீ ஸ்டிக் ஆகிய இலவசங்களை ஹானர் 8 ப்ரோ வாங்குவதன் மூலம் கிடைக்கும். மேலும், நிறுவனத்தின் 6எக்ஸ் ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு பிரீமியம் செல்பீ ஸ்டிக் இலவசமாக கிடைக்கும். இந்த லிமிடெட் சலுகைகள் ஹானர் ஸ்டோரில் நாடாகும் 3 நாள் நிகழ்வில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நினைவூட்டும் வண்ணம், இந்நிறுவனம் இந்திய சந்தையில் அதன் ஹானர் 8 ப்ரோ சாதனத்தை ரூ.29,999/-க்கும் மற்றும் கடந்த ஜனவரி மாதம் ஹானர் 6எக்ஸ் ஸ்மார்ட்போனை (4 ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாதிரி தற்போது) ரூ.13,999/-க்கு அறிமுகம் செய்தது.

டிஸ்பிளே

டிஸ்பிளே

ஹானர் 8 ப்ரோ அம்சங்களை பொறுத்தமட்டில், 2560 x 1440 பிக்சல்கள் என்ற திரை தீர்மானம் மற்றும் 515பிபிஐ பிக்சல் அடர்த்தி கொண்ட ஒரு 5.7-அங்குல க்யூஎச்டி எல்டிபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே, நிறுவனத்தின் கிரின் 960 எக்டி-கோர் ப்ராஸசர் மூலம் இயக்கப்படுகிறது.

ரேம்

ரேம்

உடன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்ட இக்கருவி மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் வழியாக 128 ஜிபி வரை சேமிப்பு விரிவாக்கப்படக்கூடியது. ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட், 4000எம்ஏஎச் கொண்ட இந்த சாதனம் 4ஜி, வைஃபை, ப்ளூடூத் 4.2, இரட்டை சிம் ஆகிய இணைப்பு ஆதரவுகளுடன் அளவீட்டில் 157 x 77.50 x 6.97 மிமீ மற்றும் 184 கிராம் எடையுடையது.

சென்சார்

சென்சார்

மறுகையில் உள்ள 6எக்ஸ் ஆனது, பேஸ் டிடெக்ஷன் ஆட்டோஃபோகஸ் (PDAF), எல்.டி. ப்ளாஷ் முதலியன அம்சங்கள் கொண்ட 12 மெகாபிக்சல் சென்சார் மற்றும் ஒரு 2 மெகாபிக்சல் சென்சார் கலவையை கொண்டுள்ளது மற்றும் முன்பக்கம் ஒரு 8 மெகாபிக்சல் சென்சார் உள்ளது.

டிஸ்பிளே

டிஸ்பிளே

மற்ற குறிப்புகளை பொறுத்தவரை, ஹானர் 6எக்ஸ் ஆனது ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ அடிப்படையிலான இஎம்யூஐ (EMUI) வி4.1 உடன் இயங்குகிறது. தவிர, 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்பு கொண்ட 5.5 அங்குல (1080x1920 பிக்சல்கள்) முழு எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே, கிரின் 655 ஆக்டா-கோர் உடனான மாலி- டி830எம்பி2 ஜிபியூ மூலம் இயக்கப்படுகிறது.

ரேம்

ரேம்

3 ஜிபி ரேம் + 32 ஜிபி உள் சேமிப்பு அல்லது 4ஜிபி ரேம் + 64ஜிபி உள் சேமிப்பு என்ற இரண்டு மாதிரிகளிலும் மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக உள் சேமிப்பு நீட்டிப்பு ஆதரவு உள்ளது. ஒரு 3340எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படும் இக்கருவி 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத், ஏ-ஜிபிஎஸ் ஆகிய இணைப்பு ஆதரவுகளை வழங்குகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Honor offers freebies on the purchase of Honor 8 Pro, Honor 6X.v Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X