6ஜிபி ரேம் உடன் வெளிவரும் அட்டகாசமான ஹானர் 9 நோட்.!
இக்கருவி 6.6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080 பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஹவாய் நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, அதன்பின் தற்போது ஹவாய் மேட் 10 என்ற ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. விரைவில் ஹானர் 9 நோட் ஸ்மார்ட்போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹானர் 9 நோட் பொதுவாக கீரின் 965சிப்செட் அம்சங்களுடன் வெளிவரும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது, மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஹானர் 9 நோட் வெளிவரும் எனக் கூறப்பட்டுள்ளது.

6.6-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 6.6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080 பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,மேலும் கொரில்லா கண்ணாடி2.5 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

6ஜிபி ரேம்:
ஹானர் 9 நோட் பொதுவாக 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

12எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய லென்ஸ் பகுதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் உள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத் 4.0, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

2660எம்ஏஎச்:
ஹானர் 9 நோட் பொறுத்தவரை 2660எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி ஒன்று இவற்றில் அடக்கம் என அந்நிறுவனம் தகவல் கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications