மார்க்கெட்டை மிரட்டும் புது அல்ட்ரா ஸ்லிம் போன்.. 155 கிராமில் 6.1மிமீ ஸ்லிம் பாடி.. 16GB ரேம், 80W சார்ஜிங்!
ஹானர் (Honor) நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் - ஒரு சூப்பர் ஸ்லிம் ஸ்மார்ட்போன் (Super Slim Smartphone) ஆக இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அது ஹானர் மேஜிக் 8 ப்ரோ ஏர் (Honor Magic 8 Pro Air) ஸ்மார்ட்போன் ஆகும்.
ஹானர் மேஜிக் 8 ப்ரோ ஏர் ஸ்மார்ட்போன் குறித்த ஒரு புதிய டீஸரின் வழியாக, இது ஸ்லிம் ஆன டிசைனை கொண்டிருக்கும் என்பது மட்டுமின்றி இதன் - சூப்பர் லைட் பாடி மற்றும் டெலிஃபோட்டோ கேமரா ஆகிய முக்கிய அம்சங்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

ஹானர் மேஜிக் 8 ப்ரோ ஏர் ஸ்மார்ட்போனின் அல்ட்ரா ஸ்லிம் மற்றும் லைட் டிசைன்: சீன பிராண்ட் ஆன ஹானரின் வரவிருக்கும் மேஜிக் 8 ப்ரோ ஏர் ஸ்மார்ட்போனானின் லேட்டஸ்ட் டீஸர் ஆனது 6.1மிமீ பாடியில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும் என்பதையும், அதில் ஒரு கேமரா பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் ஆக இருக்கும் என்பதையும் உறுதிப்படுத்தி உள்ளது
குறிப்பிட்ட சென்சார் ஆனது 64எம்பி கேமராவாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. ஸ்லிம் டிசைனை தவிர, இந்த மாடல் அதன் போட்டியாளர்களை விட இலகுவானதாகவும் இருக்கும். ஆப்பிளின் ஐபோன் ஏர் மற்றும் சாம்சங்கின் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஆகிய மாடல்கள் முறையே 165 கிராம் மற்றும் 163 கிராம் எடையை கொண்டுள்ளன
இதற்கிடையில் ஹானர் மேஜிக் 8 ப்ரோ ஏர் ஸ்மார்ட்போன் ஆனது வெறும் 155 கிராம் எடையை மட்டுமே கொண்டுள்ளது. இருப்பினும் இது ரியர் பேனலில் உள்ள ப்ரைமரி கேமராவில் பெரிய 1/1.3-இன்ச் சென்சாரை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது மேலும் இதன் டெலிஃபோட்டோ ஷூட்டர் ஆனது 3.2x ஆப்டிகல் ஜூமை வழங்கும் என்று கூறப்படுகிறது.
பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங்கை பொறுத்தவரை இந்த மாடலில் 5,500mAh பேட்டரி பேக் செய்யப்படலாம். இது 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை கொண்டிருக்கலாம். கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது 16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜையும் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடைசியாக ஹானரின் இந்த அல்ட்ரா ஸ்லிம் ஸ்மார்ட்போன் ஆனது ஃபேரி பர்பிள், லைட் ஆரஞ்சு, ஃபெதர் ஒயிட் மற்றும் ஷேடோ பிளாக் என்கிற 4 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சீன அறிமுகத்தை தொடர்ந்து இந்தியா உட்பட மற்ற சந்தைகளில் அறிமுகம் செய்யப்படுமா என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
முன்னதாக அறிமுகமான ஹானர் மேஜிக் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட மேஜிக்ஓஎஸ் 10
- 6.71-இன்ச் 1.5கே LTPO OLED டிஸ்பிளே (120Hz ரெஃப்ரெஷ் ரேட், 6000 நிட்ஸ் வரையிலான எச்டிஆர் பீக் ப்ரைட்னஸ்)
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- 16GB வரை ரேம் மற்றும் 1TB வரை இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ட்ரிப்பிள்ரியர் கேமரா யூனிட்
- 50 மெகாபிக்சல் 1/1.3-இன்ச் ப்ரைமரி சென்சார்
- 50 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
- 200 மெகாபிக்சல் 1/1.4-இன்ச் டெலிஃபோட்டோ கேமரா (எப்/2.6, 3.7x ஆப்டிகல் ஜூம் மற்றும் 100x டிஜிட்டல் ஜூம்)
- AIMAGE ஹானர் நோக்ஸ் எஞ்சின் மற்றும் CIPA 5.5 இமேஜ் ஸ்டெபிலைசேஷன்
- 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 3D டெப்த் சென்சார்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68, IP69 மற்றும் IP69K ரேட்டிங்
- 5ஜி, வைஃபை 7, ப்ளூடூத் 6.0, ஜிபிஎஸ்/ஏஜிபிஎஸ், கலிலியோ, க்ளோநாஸ், பைடு, என்எப்சி, ஓடிஜி மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 100W (வயர்டு) மற்றும் 80W (வயர்லெஸ்) பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 7,200mAh பேட்டரி
- அளவீட்டில் 161.15×75×8.32மிமீ மட்டும் எடையில் 219 கிராம்.
முன்னதாக அறிமுகமான ஹானர் மேஜிக் 8 ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- ப்ரோ மாடலில் உள்ள அதே சாஃப்ட்வேர், செல்பீ கேமரா, ஐபி ரேட்டிங்ஸ், சிப்செட் மற்றும் கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள்
- 6.58-இன்ச் FHD+ டிஸ்பிளே (120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 6000 நிட்ஸ் வரையிலான எச்டிஆர் பீக் ப்ரைட்னஸ்)
- அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்
- 50 மெகாபிக்சல் 1/1.56-இன்ச் ப்ரைமரி சென்சார்
- 50 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
- 3x ஆப்டிகல் ஜூம் மற்றும் 100x வரை டிஜிட்டல் ஜூம் கொண்ட 64-மெகாபிக்சல் சூப்பர் நைட் காட் டெலிஃபோட்டோ சென்சார்
- 50 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் செல்பீ கேமரா
- 90W (வயர்டு) மற்றும் 80W (வயர்லெஸ்) ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 7,000mAh பேட்டரி
- அளவீடுகளில் 157.12×74.03×7.95மிமீ மற்றும் எடையில் சுமார் 205 கிராம்.


Click it and Unblock the Notifications








