டோட்டல் மார்க்கெட் காலி.. 7.92-இன்ச் டிஸ்பிளே, 16GB ரேம், 66W சார்ஜிங், 50எம்பி OIS EIS கேமரா.. என்ன மாடல்?
எந்த கோணத்தில் பார்த்தாலும் குறை சொல்ல முடியாத அளவிற்கு சீன மொபைல் நிறுவனமான ஹானர் (Honor) ஒரு அட்டகாசமான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதென்ன ஸ்மார்ட்போன்? அதன் விலை நிர்ணயம் என்ன? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:
ஹானர் 90 5ஜி அறிமுகத்தின் வாயிலாக ஹானர் நிறுவனம் மீண்டும் இந்திய சந்தைக்குள் நுழைந்துள்ளதால் இந்நிறுவனத்தின் ஒவ்வொரு அறிமுகத்தையும் நாம் கவனிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் சீன அறிமுகத்தை தொடர்ந்து எந்தவொரு ஹானர் போனும் எப்போது வேணுமானாலும் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படலாம்.

அப்படியாக நேற்று (அக்டோபர் 12 ஆம் தேதி) ஹானர் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனாக ஹானர் மேஜிக் விஎஸ் 2 என்கிற மாடல் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏற்கனவே சாம்சங்கும், மோட்டோரோலாவும் போட்டிப்போட்டு கொண்டு ஃபோல்டபிள் போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்னர், கூகுள் தனது முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான பிக்சல் ஃபோல்ட் மாடலை அறிமுகம் செய்தது. வருகிற அக்.19 ஆம் தேதியன்று ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது.
இப்படியாக ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களின் மார்க்கெட் ஆனது புயல் வேகத்தில் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் நேரத்தில் தான் ஹானர் மேஜிக் விஎஸ் 2 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம், இது கடந்த பிப்ரவரியில் நடந்த மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2023 இல் வெளியிடப்பட்ட ஹானர் மேஜிக் விஎஸ் ஸ்மார்ட்போனின் தொடர்ச்சியாகும்.
ஹானர் மேஜிக் விஎஸ் 2 ஸ்மார்ட்போனின் அம்சஙகள்: இது 2344 x 2156 பிக்சல்ஸ், 1600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 9.78:9 ரேஷியோ உடனான 7.92-இன்ச் OLED இன்னர் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் 2376 x 1060 பிக்சல்ஸ், 2500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் 20:9 ரேஷியோ உடனான 6.43-இன்ச் OLED கவர் டிஸ்பிளேவையும் கொண்டுள்ளது,.
ஹானரின் இந்த லேட்டஸ்ட் புக்-ஸ்டைல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட், அட்ரெனோ 730 ஜிபியு கொண்டு இயக்கப்படுகிறது. இது 16ஜிபி வரையிலான ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட மேஜிக் ஓஎஸ் 7.2 உடன் வரும் ஹானர் மேஜிக் விஎஸ் 2 ஸ்மார்ட்போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது. அதில் வைட் ஆங்கிள் லென்ஸுடன் 50 மெகாபிக்சல் சென்சார் + டெலிஃபோட்டோ லென்ஸுடன் 20 மெகாபிக்சல் சென்சார் + அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸுடன் 12 மெகாபிக்சல் சென்சார் உள்ளன.
சுவாரசியமாக இதன் கேமராக்கள் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical image stabilization - OIS) மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (Electronic image stabilization - EIS) ஆதரவுடன் வருகின்றன. முன்பக்க கேமராவை பொறுத்தவரை, இது 16 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது.
பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் 66W வயர்டு சூப்பர் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, இது 5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, ப்ளூடூத் 5.2 மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்றவைகளை கொண்டுள்ளது.
ஹானர் மேஜிக் விஎஸ் 2 ஸ்மார்ட்போனின் விலை: க்ளேசர் ப்ளூ, மிட்நைட் பிளாக் மற்றும் வயலெட் கோரல் கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹானர் மேஜிக் விஎஸ் 2 ஸ்மார்ட்போனின் பேஸிக் வேரியண்ட் ஆன 12ஜிபி + 256ஜிபி ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.80,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








