Home
Mobile

தலைவன் திமிங்கலம் தானுங்கோ.. 10000mAh பேட்டரி, 12GB ரேம், iPhone டிசைன் கேமரா.. 2026-ஐ கலக்க போகும் போன்!

ஹானர் நிறுவனம் தனது அடுத்த பவர்-சீரிஸ் ஸ்மார்ட்போனை கூடிய விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது போல் தெரிகிறது. அது 10,000எம்ஏஎச் பேட்டரி கொண்ட ஹானர் பவர் 2 ஸ்மார்ட்போன் ஆகும். அறிமுகத்திற்கு முன்பாக இந்த ஸ்மார்ட்போனின் சிப்செட், ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மற்றும் சாஃப்ட்வேர் குறித்த விவரங்கள் லீக் ஆகியுள்ளன.

ஹானர் பவர் 2 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? கீக்பெஞ்ச் பட்டியலின்படி, ஹானர் பவர் 2 (Honor Power 2) ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் மாடல் நம்பரை கொண்ட HONOR SER-AN00 என்கிற ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 8500 சிப்செட்டில் இயங்கும். இது 12ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான மேஜிக்ஓஎஸ் 10 உடன் வரும்.

10000mAh பேட்டரி, iPhone டிசைன் கேமரா.. 2026-ஐ கலக்க போகும் போன்!

முக்கிய அம்சங்களுக்கு அப்பால், ஹானர் பவர் 2 ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு குறித்த சில விவரங்களும் வெளியாகியுள்ளன. டிப்ஸ்டர் பால்ட் பாண்டா வழியாக கிடைத்த தகவலின்படி இந்த ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறும், அதிலுள்ள மூன்று லென்ஸ்களும் ஒரு பெரிய, மையமாக வைக்கப்பட்டுள்ள கேமரா மாட்யூலை கொண்டுள்ளது.

அதாவது இது ஆப்பிளின் சமீபத்திய ப்ரோ-சீரிஸ் ஐபோன்களை போலவே உள்ளது. முந்தைய அறிக்கைகள் ஹானர் பவர் 2 ஸ்மார்ட்போன் ஆனது 1.5கே ரெசல்யூஷன் உடனான 6.79-இன்ச் பிளாட் OLED டிஸ்ப்ளே, 50-மெகாபிக்சல் ப்ரைமரி ரியர் கேமரா மற்றும் 16-மெகாபிக்சல் செல்பீ கேமரா ஆகிய அம்சங்களை பரிந்துரைக்கின்றன

இந்த ஸ்மார்ட்போனின் மிகப்பெரிய சிறப்பம்சமாக இதன் பேட்டரி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது சுமார் 10,000mAh அல்லது அதற்கு மேற்பட்ட எதிறன் கொண்டதகா இருக்கும் என்றும், இது 80W பாஸ்ட் சார்ஜிங்குடன் வரும் என்றும் இதில் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நினைவூட்டும் வண்ணம் கடந்த ஏப்ரல் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹானர் பவர் ஸ்மார்ட்போன் ஆனது 66W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 8,000mAh பேட்டரி மற்றும் நிறுவனத்தின் சுயமாக உருவாக்கப்பட்ட சி1+ சீரிஸ் சிப் உடன் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் ஆகியவற்றை கொண்டுள்ளது.

ஹானர் பவர் 2 ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகம் செய்யப்படலாம்? இது ஜனவரி 2026 இல் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் உள்ள டைமன்சிட்டி 8500 சிப்செட் ஆனது ரெட்மி டர்போ 5, போக்கோ எக்ஸ்8 ப்ரோ மற்றும் ரியல்மி நியோ 8 எஸ்இ உள்ளிட்ட பிற வரவிருக்கும் போன்களிலும் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஹானர் மேஜிக் வி6 ஸ்மாட்போனும் விரைவில் அறிமுகம் ஆகிறது: இது குவால்காமின் பிளாக்ஷிப் சிப்செட் ஆன ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்டால் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் டூயல் செல் பேட்டரி பொருத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது மொத்தமாக 6,900mAh வரையிலான திறனை வழங்கக்கூடும்.

மேலும் ஹானர் நிறுவனம் ஆனது 7200mAh பேட்டரியுடன் கூடிய மேஜிக் வி6 ஸ்மார்ட்போனின் மற்றொரு மாடலையும் அறிமுகப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் ஒரு ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனுக்கு இவ்வளவு மிகப்பெரிய பேட்டரியை பேக் செய்யும் முதல் நிறுவனமாக ஹானர் இருக்கும்.

கேமராக்களை பொறுத்தவரை, ஹானர் மேஜிக் வி6 ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 200 மெகாபிக்சல் பிரைமரி கேமரா பேக் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இது முந்தைய லீக் விவரங்களுடன் ஒத்துப்போகிறது. மேலும் இதன் ரியர் கேமரா செட்டப்பில் 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் திறன்களை கொண்ட பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவும் இடம்பெறலாம். கடைசியாக, இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரையும் கொண்டிருக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor New 10000mAh Battery Phone Honor Power 2 Chipset Storage Software Leaked Ahead Jan 2026 Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X