Home
Mobile

Honor அறிமுகம் செய்த புது 5ஜி போன்.. 7500mAh பேட்டரி.. IP69K ரேட்டிங்.. 108எம்பி கேமரா.. எந்த மாடல்?

ஹானர் நிறுவனம் தனது புதிய ஹானர் மேஜிக்8 லைட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ஐபி69கே ரேட்டிங், ஒஎல்இடி டிஸ்பிளே, 7500எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஹானர் மேஜிக்8 லைட் அம்சங்கள் (Honor Magic8 Lite specifications): 6.79-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே உடன் ஹானர் மேஜிக்8 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 6000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்,120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), டைனாமிக் டிம்மிங் (Dynamic Dimming) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

Honor அறிமுகம் செய்த புது 5ஜி போன்.. 7500mAh பேட்டரி.. எந்த மாடல்?

OIS ஆதரவு கொண்ட 108எம்பி மெயின் கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த ஹானர் மேஜிக்8 லைட் ஸ்மார்ட்போன் மாடல். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 (Snapdragon 6 Gen 4) சிப்செட் உடன் இந்த புதிய போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விசி ஐஸ் கூலிங் சிஸ்டம் ஆதரவும் உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம். அதேபோல் மேம்பட்ட ஏஐ அம்சங்களும் இந்த புதிய ஹானர் ஸ்மார்ட்போனில் உள்ளது.

Honor அறிமுகம் செய்த புது 5ஜி போன்.. 7500mAh பேட்டரி.. எந்த மாடல்?

IP68 ரேட்டிங் + IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த புதிய போன் வெளிவந்துள்ளது. இதுதவிர SGS டிரிபிள்-ரெசிஸ்டண்ட் சான்றிதழ் பெற்றுள்ளது ஹானர் மேஜிக்8 லைட் போன். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இந்த போனின் பாதுகாப்பு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹானர் நிறுவனம்.

மேஜிக்ஓஎஸ் 9.0 (MagicOS 9.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய ஹானர் மேஜிக்8 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹானர் சவுண்ட் 7.3 ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.

8ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவு கொண்டுள்ளது ஹானர் மேஜிக்8 லைட் ஸ்மார்ட்போன். மேலும் 5ஜி, டூயல் சிம், வைஃபை 6, ப்ளூடூத் 5.2, யுஎஸ்பி டைப்-சி, ஓடிஜி, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ஹானர் ஸ்மர்ட்போனில் உள்ளன.

Honor அறிமுகம் செய்த புது 5ஜி போன்.. 7500mAh பேட்டரி.. எந்த மாடல்?

7500mAh பேட்டரி உடன் ஹானர் மேஜிக்8 லைட் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

தற்போது ஹானர் மேஜிக்8 லைட் ஸ்மார்ட்போன் இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும். மேலும் இந்த போனின் விலை USD 535 (இந்திய மதிப்பில் ரூ.48,191)-ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
HONOR Magic8 Lite launched: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X