இவரு வேற மாதிரி.. 200MP டெலிபோட்டோ.. 100W சார்ஜிங்.. 24GB ரேம்.. 5850mAh பேட்டரி.. போர்ஸ் அப்படி.. எந்த மாடல்?
200 எம்பி டெலிபோட்டோ கேமரா, 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 80W வயர்லெஸ் சார்ஜிங், 5850mAh பேட்டரி, 24 ஜிபி ரேம், 100x டிஜிட்டல் ஜூமிங், குவாட் கர்வ்ட் டிஸ்பிளே போன்ற ஒட்டுமொத்த பீச்சர்களிலும் பிரீமியம் காட்டியது மட்டுமல்லாமல், ஆர்எஸ்ஆர் போர்ஸ் (RSR Porsche) டிசைனில் ஹானர் மேஜிக்7 (HONOR Magic7) போன் களமிறங்கி இருக்கிறது. பிரீமியம் போன்களுக்கே பிரீமியமாக மூக்கில் விரல் வைக்க செய்துள்ளது. இந்த ஹானர் மேஜிக்7 ஆர்எஸ்ஆர் போர்ஸ் டிசைன் போனின் முழு பீச்சர்கள், விலை விவரங்கள் இதோ.
ஹானர் மேஜிக்7 சீரிஸ் மாடல்கள் அக்டோபரில் வெளியாகி ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டையும் மிரளவிட்டன. பிரீமியம் போன் பிரியர்களிடையே விற்பனையில் சக்கைப்போடு போட்டது. இப்போது, ஹானர் மேஜிக்7 ஆர்எஸ்ஆர் போர்ஸ் டிசைன் மாடல் களமிறக்கப்பட்டுள்ளது. இந்த ஹானர் மாடலின் விற்பனை டிசம்பர் 24ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது.

ஹானர் மேஜிக்7 ஆர்எஸ்ஆர் போர்ஸ் டிசைன் அம்சங்கள் (HONOR Magic7 RSR Porsche Design Specifications): பிரீமியம் மாடலாக இருப்பதால், அதற்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி 3என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் எஸ்ஓசி (3nm Octa Core Snapdragon 8 Elite SoC) சிப்செட் மற்றும் பக்கா கேமிங் அவுட்புட் கொடுக்கும் அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் வருகிறது.
16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 24 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்களை ஆர்டர் செய்து கொள்ளலாம். ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஹானரின் லேட்டஸ்ட் மேஜிக் யுஐ 9.0 (Magic UI 9.0) கிடைக்கிறது. ஆகவே, ஏஐ கேமரா பீச்சர்களை எதிர்பார்க்கலாம். 6.8 இன்ச் (1280 × 2800 பிக்சல்கள்) குவாட் கர்வ்ட் (Quad Curved) டிஸ்பிளேவை கொடுக்கிறது.
இந்த ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. எச்டிஆர்1பிளஸ் (HDR10+) மற்றும் 4320Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. ஹெக்ஸாகோனல் (Hexagonal) பம்ப் டிசைனில் பிரீமியம் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 200 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது. இந்த கேமராவில் 3X ஆப்டிகல் ஜூமிங், 100X டிஜிட்டல் ஜூமிங் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் 4K வீடியோ ஷூட்டிங் சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், 4K ரெக்கார்டிங்குடன் 50 எம்பி 3டி டெப்த் செல்பீ ஷூட்டர் பேக் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஹானர் மேஜிக்7 ஆர்எஸ்ஆர் போர்ஸ் டிசைன் போனில் 5850mAh பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. இதுபோக 80W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. IP68 ரெசிஸ்டன்ட் மட்டுமல்லாமல், IP68 ரெசிஸ்டன்ட் கொண்ட மாடலாக இந்த போர்ஸ் டிசைன் இருக்கிறது. அல்ட்ரா சோனில் ஃபிங்கர்பிரிண்ட் சென்சாரை கொடுக்கிறது.
16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை ரூ.93,270 ஆக இருக்கிறது. 24 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.1,04,905ஆக இருக்கிறது. சீன மார்கெட்டில் பிரீ-ஆர்டர் தொடங்கிவிட்டது. டிசம்பர் 24ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. மேஜிக்7 சீரிஸ் மாடல்கள் இந்தியாவில் விரைவில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








