யாரு சாமி அவன்.. 200MP கேமரா.. 100W சார்ஜிங்.. 5270mAh பேட்டரி.. 3D டிஸ்பிளே.. 12GB ரேம்.. எந்த மாடல்?
குவாட் கர்வ்ட் டிஸ்பிளே, 200 எம்பி டெலிபோட்டோ கேமரா, 3டி டெப்த் செல்பீ கேமரா, 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 80W வயர்லெஸ் சார்ஜிங், 5270mAh பேட்டரி போன்ற அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களுடன் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3என்எம் சிப்செட் மற்றும் 12 ஜிபி ரேம் கொண்ட மாடலாக ஹானர் மேஜிக்7 ப்ரோ (HONOR Magic7 Pro) வெளியாகி இருக்கிறது. கேமிங் மற்றும் கேமரா பிரியர்களுக்காக கூடுதல் பீச்சர்களுடன் ஆல்-ரவுண்ட் மாடலாக களமிறங்கி இருக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.
கேமரா பிரியர்களுக்காக பீச்சர்களை பார்க்கையில், ஹானர் இமேஜ் என்ஜின் (HONOR Image Engine) சப்போர்ட் கொண்ட கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. ஏஐ சூப்பர் ஜூம் (AI Super Zoom), ஹானர் ஏஐ மோஷன் (HONOR AI Motion) மற்றும் ஏஐ என்ஹான்ஸ்டு போர்ட்ராய்டு (AI Enhanced Portrait) போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. கேமிங் பிரியர்களுக்கான பீச்சர்களும் கிடைக்கின்றன.

ஆகவே, அல்ட்ரா வைடு ஏரியா கூலிங் சிஸ்டம் (Ultra Wide Area Cooling System) கிடைக்கிறது. இதுபோக ஏஐ நாய்ஸ் ரெடக்சன் (AI Noise Reduction), ஏஐ பிரைவசி கால் (AI Privacy Call), ஏஐ நோட்ஸ் (AI Notes), ஏஐ எடிட் (AI Edit) மற்றும் கூகுள் ஜெமினி (Google Gemini) போன்ற ஏஐ பீச்சர்களில் பின்னிப்பெடல் எடுத்துள்ளது. இப்போது, பிரீமியமாக பேக் செய்யப்பட்ட மற்ற பீச்சர்களை பார்ப்போம்.
ஹானர் மேஜிக்7 ப்ரோ அம்சங்கள் (HONOR Magic7 Pro Specifications): இந்த ஹானர் போனில் மேஜிக் யுஐ 9.0 (Magic UI 9.0) பேஸ்டு ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. இந்த மேஜிக் ஓஎஸ் ஏற்கனவே பார்த்த ஏஐ பீச்சர்களுக்கு பிரத்யேகமாக கிடைக்கிறது. பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் 3என்எம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Octa Core 3nm Snapdragon 8 Elite) வருகிறது.
ஹானரின் நானோ கிரிஸ்டல் சீல்டு (Nano Crystal Shield) புரொடெக்சன் கொண்ட 6.8 இன்ச் (1280 × 2800 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 4320Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிஆர்ட்10 (HDR10+) சப்போர்ட் கொடுக்கப்படுகிறது.
இந்த ஹானர் மேஜிக்7 ப்ரோ போனில் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. 50 எம்பி செல்பீ ஷூட்டர் + 3டி டெப்த் கேமரா கிடைக்கிறது. இந்த ஷூட்டரில் 4K வீடியோ ரெக்கார்டிங், 3டி பேஸ் லாக் சப்போர்ட் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 200 எம்பி டெலிபோட்டோ கேமரா கொடுக்குகிறது.
மெயின் கேமராவில் ஓம்னிவிஷன் சென்சாரும், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜியும் கிடைக்கிறது. அல்ட்ரா வைடு கேமராவில் மேக்ரோ சப்போர்ட் கிடைக்கிறது. இந்த டெலிபோட்டோவில் சாம்சங் சென்சார், 100X டிஜிட்டல் ஜூமிங் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கிடைக்கிறது. IP68 மற்றும் IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட் பேக் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஹானர் மேஜிக்7 ப்ரோ போனில் 5270mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 100W சூப்பர்சார்ஜ், 80W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. லூனார் ஷோடோ கிரே, பிரீஸ் ப்ளூ மற்றும் பிளாக் கலர்களில் ஆர்டர் செய்யலாம். இந்த போனின் 12 ஜிபி ரேம் வேரியண்ட்டின் விலை ரூ.1,15,880ஆக இருக்கிறது. ஐரோப்பாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்தியாவில் விரைவில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








