மிரண்டு போவீங்க.. 50MP பெரிஸ்கோப் கேமரா.. 100X டிஜிட்டல் ஜூம்.. QUAD கர்வ்ட் டிஸ்பிளே.. 12GB ரேம்.. எந்த போன்?
இந்திய கேமரா பிரியர்கள் மூக்கில் விரல் வைக்கும்படி 100x டிஜிட்டல் ஜூமிங் கொண்ட 50 எம்பி டெலிபோட்டோ கேமரா, ஓம்னிவிஷன் சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா, 3டி டெப்த் லென்ஸ் கொண்ட 50 எம்பி செல்பீ கேமரா போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், குவாட்-கர்வ்ட் ஓஎல்இடி டிஸ்பிளே, 80W வயர்டு மற்றும் 66W வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட 5600mAh பேட்டரி கொண்ட ஹானர் மேஜிக்6 ப்ரோ (HONOR Magic6 Pro) மாடலானது மார்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது.
ஹானர் மேஜிக்6 ப்ரோ அம்சங்கள் (HONOR Magic6 Pro Specifications): இந்த ஹானர் போனில் 6.8 இன்ச் (1280 x 2800 பிக்சல்கள்) குவாட்-கர்வ்ட் ஓஎல்இடி (Quad-Curved OLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட ப்ளோட்டிங் ஸ்கிரீன் (Floating Screen) மாடலாகும். ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் வருகிறது.

மேலும், எச்டிஆர்10பிளஸ் (HDR10+), 4320Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. டால்பி விஷன் (Dolby Vision), 453 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 1.07 பில்லியன் கலர் டெப்த் உள்ளது. இந்த டிஸ்பிளேவுக்கு எஸ்ஜிஎஸ் 5 ஸ்டார் நானோ கிரிஸ்டல் சீல்டு (SGS 5-Star Nano Crystal Shield) பாதுகாப்பு வருகிறது.
அதேபோல 10X டிராப் ரெசிஸ்டன்ட் (Drop-Resistant) உள்ளது. மொத்தமாக IP68 வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட் வருகிறது. நெக்ஸ்ட் ஜென் ஹானர் பால்கன் கேமரா சிஸ்டம் (Next Gen HONOR Falcon Camera System) வருகிறது. 50 எம்பி மெயின் + 180 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கொண்ட டூயல் ஓஐஎஸ் கேமரா (Dual OIS Camera) வருகிறது.
மேலும், 50 எம்பி அல்ட்ரா-வைடு கேமரா வருகிறது. மெயின் கேமராவில் ஓம்னிவிஷன் ஓவிஎச்9000 (OmniVision OVH9000) சென்சார் வருகிறது. டெலிபோட்டோவில் 2.5x ஆப்டிகல் ஜூமிங் (Optical Zooming) மற்றும் 100x டிஜிட்டல் ஜூமிங் (Digital Zoom) வருகிறது. அல்ட்ரா வைடு கேமராவில் மேக்ரோ ஆப்ஷன் வருகிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் உள்ளது.

இந்த ஹானர் மேஜிக்6 ப்ரோ போனில் 50 எம்பி செல்பீ கேமரா + 3டி டெப்த் கேமரா (3D Depth Camera) வருகிறது. இந்த கேமராவில் 3டி பேஸ் அன்லாக் (3D Face Unlock) சப்போர்ட் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் வருகிறது. மேலும், ஏஐ மோஷன் சென்சிங் கேப்ச்சர் (AI Motion Sensing Capture) மற்றும் ஏஐ போட்டோகிராபி (AI Photography) வருகிறது.
பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4 என்எம் (Qualcomm Snapdragon 8 Gen 3 4nm) மற்றும் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. ஐபோன் மாடல்களை போல பிரைவசி பாதுகாப்புக்காக ஹானர் செக்யூரிட்டி சிப் எஸ்1 (HONOR Security Chip S1) வருகிறது. மேஜிக்ஓஎஸ்8.0 வருகிறது.
ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்டிருக்கிறது. இந்த ஹானர் மேஜிக்6 ப்ரோ போனில் 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் (Wired Fast Charging) கொண்ட 5600mAh 2ஆம் ஜென் சிலிகான்-கார்பன்) பேட்டரி (2nd Gen Silicon-Carbon Battery) வருகிறது. மேலும், 66W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (Wireless Fast Charging) சப்போர்ட் வருகிறது.
இந்த போனின் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.89,999ஆக இருக்கிறது. இந்தியாவில் விற்பனை தொடங்கி இருக்கிறது. அமேசான் (Amazon), எக்ஸ்ப்ளோர்ஹானர்.காம் (explorehonor.com) மற்றும் ஆஃப்லைன் ல்டோர்களில் (Offline Stores) ஆர்டருக்கு கிடைக்கிறது. 12 மாதங்களுக்கு நோ-காஸ்ட் சலுகை கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications